சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தமிழ்நாடு மக்களிடமிருந்து அன்புடன்!" இலங்கைக்கு பொருட்களை அனுப்ப குழு அமைப்பு.. தமிழக அரசு அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்கப்படும் நிலையில், இது தொடர்பாக புதிய உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் சுதந்திரம் அடைந்தது பிறகு இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பின், இலங்கை நாட்டில் இருக்கும் எந்தத் துறையும் இன்னும் மீளவில்லை. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் அப்படியே அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.

அட.. இலங்கைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரண மூட்டையில் என்ன எழுதியுள்ளது பார்த்தீங்களா? சூப்பர்! அட.. இலங்கைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரண மூட்டையில் என்ன எழுதியுள்ளது பார்த்தீங்களா? சூப்பர்!

இலங்கை

இலங்கை

இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சத்தைத் தொட்டுள்ளது. காய்கறி, பழங்கள் மற்றும் பாலின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இலங்கை மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

ராஜினாமா

ராஜினாமா

இதன் காரணமாக ராஜபக்ச அரசுக்கு உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் வீதிகளில் போராட்டத்திலும் இறக்கினர், முதலில் பதவி விலக மறுத்த மகிந்த ராஜபக்ச, போராட்டம் வலுவடைந்ததால் வேறு வழியின்றி பதவி விலகினார். இருந்த போதிலும், மக்கள் போராட்டம் தொடர்ந்ததால் ஊரடங்கும் அங்கு அறிவிக்கப்பட்டது.

 உதவி பொருட்கள்

உதவி பொருட்கள்

மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்சி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் உதவி வருகின்றன. இலங்கைக்கு மத்திய அரசு ஏற்கனவே உதவி பொருட்களை அனுப்பி வரும் நிலையில், தமிழகம் சார்பிலும் உதவி பொருட்கள் அனுப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் "தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

குழு

குழு

இதனிடையே இந்த பொருட்களை அனுப்பும் பணிகளைக் கவனிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறைச் செயலர் ஜெசிந்தா, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர், ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மருந்து கொள்முதல் இயக்குநர் இடம் பெற்றுள்ளனர்.

எப்போது

எப்போது

சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் இருந்தும் இலங்கைக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

English summary
4 ips officers to send goods to sri lanka forms Tamilnadu govt: (இலங்கை நாட்டில் நிலவும் மிக மோசமான அரசியல் பாதிப்பு) Sri Lanka financial crisis latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X