சூப்பர் சான்ஸ்..ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! தமிழ்நாடு அரசு தரும் வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் இதில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. எப்போது என்று விரிவாக பார்ப்போம்?
தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு இதனை பெற தகுதி இருக்கும் பெண்கள் யார், தகுதி இல்லாதவர்கள் யார் என்ற பட்டியலை அறிவித்தது.

முதல் கட்ட முகாம்கள் கடந்த 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதில் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இணையத்திலும் அவை பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் 2 ஆம் கட்ட முகாம் 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 விண்ணப்பப் பதிவு முகாமில் முதல் 04.08.2023 88.34 இலட்சம் வரை நடைபெற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications