அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் விவகாரம்- தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை சொல்வது என்ன?
ஓய்வூதிய திட்டம் தொடர்பான தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கை குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் மாறுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாகவும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தமிழ்நாடு அரசு பிறப்பித்திருந்த உத்தரவு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது.
இப்பங்களிப்பு பென்சன் திட்டத்தில் ஓய்வூதியம் என்பது உத்தரவதம் எதுவும் இல்லை என்பது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் அரசு ஊழியர்களின் அதிருப்தி. ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர்கள்.

கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. தற்போது ஆளும் திமுக, தமது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களிடையே வரவேற்பையும் பெற்றது. திமுக ஆட்சி அமைந்தது முதல் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. அதேநேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டன. இதனை அரசு ஊழியர்கள் ஏற்கவில்லை. மேலும் தமிழ்நாடு தழுவிய அளவில் சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ஒழிப்பதற்கான இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முன்னெடுத்தனர். அண்மையில் சென்னையில் பிரம்மான்டமான மாநாடும் நடத்தப்பட்டது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் இம்மாநாட்டை நடத்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஒரு தகவல் வெகுவேகமாக பரவியது. தமிழ்நாடு அரசு நிதித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலகி பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன என்பது அத்தகவல். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக இந்த சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு பணியில் இணைந்தவர் நிரந்தரமாக்கப்பட்ட போது புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. அவர்கள் பணி ஓய்வு பெறும் போது புதிய ஓய்வூதியத்தின் கீழ் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பான விவரங்களைத்தான் தமிழ்நாடு அரசு கேட்டிருந்தது. இவ்வாறு தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications