செம்ம ஜாக்பாட்! தமிழ்நாடு அரசு அதிரடி- அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் மாறுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது.
இப்பங்களிப்பு பென்சன் திட்டத்தில் ஓய்வூதியம் என்பது உத்தரவதம் எதுவும் இல்லை என்பது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் அரசு ஊழியர்களின் அதிருப்தி. ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர்கள்.

கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. தற்போது ஆளும் திமுக, தமது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களிடையே வரவேற்பையும் பெற்றது.
திமுக ஆட்சி அமைந்தது முதல் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. அதேநேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டன. இதனை அரசு ஊழியர்கள் ஏற்கவில்லை.
மேலும் தமிழ்நாடு தழுவிய அளவில் சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ஒழிப்பதற்கான இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முன்னெடுத்தனர். அண்மையில் சென்னையில் பிரம்மான்டமான மாநாடும் நடத்தப்பட்டது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் இம்மாநாட்டை நடத்தி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நிதித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலகி பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications