இனி டபுளாக கிடைக்கும்.. சொன்னதை செய்த ஸ்டாலின்.. மாணவர்களுக்கு தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: "தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு 2013-2014ம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் 1ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.7000 வரை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது.
இதன்படி, 1-முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,000 என்பதனை ரூ.2,000 ஆகவும், 6ம் முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000 என்பதனை ரூ.6,000 ஆகவும், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4000 என்பதனை ரூ.8000 ஆகவும் வழங்கப்படும்.
இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,000 என்பதனை ரூ.12,000 ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7,000 என்பதனை ரூ.14,000 ஆகவும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு இந்த ஆண்டு புதிதாக அறிவித்துள்ள திட்டங்களை இப்போது பார்ப்போம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 1.20 கோடி நிதியினை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

உயர்கல்வி பயிலும் 1000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா ரூ.14000 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் 1.40 கோடி லட்சத்தை அரசு ஒதுக்கி உள்ளது.
ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு இந்த நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 4.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications