சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் 3வது டோஸ், சிறார் வேக்சின் எப்போது போடப்படும்? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் சிறார்களுக்கான முதல் டோஸ் மற்றும் 60+ வயது கொண்டவர்களுக்கான 3வது டோஸ் எப்போது போடப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நேற்று மக்கள் முன்னிலையில் தோன்றி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வயதானவர்களுக்கு மூன்றாவது டோஸ், சிறார்களுக்கு வேக்சின் ஆகிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

ஓமிக்ரான் பரவல்..பிரதமர் மோடி இன்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரை! ஓமிக்ரான் பரவல்..பிரதமர் மோடி இன்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரை!

இந்தியாவில் ஜனவரி 10 ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், உடல் உபாதைகள் கொண்ட வயதானவர்கள் ஆகியோருக்கு "முன்னெச்சரிக்கை டோஸ்கள்" எனப்படும் மூன்றாவது டோஸ் வழங்கப்படும், மேலும் ஜனவரி 3ல் இருந்து இந்தியாவில் 15-18 வயது கொண்டவர்களுக்கு கொரோனா வேக்சின் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மா. சுப்பிரமணியன் பேட்டி

மா. சுப்பிரமணியன் பேட்டி

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்கிறார். அங்கு இருக்கும் படுக்கை வசதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்

முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்

அதன்பின் டிபிஎச் வளாகத்தில் இருக்கும் வார் ரூமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். சென்னையில் 16வது கட்ட சிறப்பு வேக்சின் முகாம் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து உள்ளனர்.

வேக்சின் தமிழ்நாடு

வேக்சின் தமிழ்நாடு

தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

எத்தனை

எத்தனை

84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுகொண்டு உள்ளனர். ஜன. 3ல் சிறார் தடுப்பூசி சென்னையில் தொடங்கப்படும். 15-18 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

சைதாப்பேட்டை பெண்கள் நகராட்சி பள்ளியில் முதல் கட்டமாக ஜனவரி 3ம் தேதி வேக்சின் போடப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Recommended Video

    Corona Flashback 2021: கொத்து கொத்தாக மரணங்கள்.. அவலங்கள்! | OneIndia Tamil
    வயந்தவர்கள்

    வயந்தவர்கள்

    தமிழ்நாட்டில் 15-18 பேர் கொண்ட நபர்கள் 33 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும்.

    அதேபோல் ஜனவரி 10ம் தேதி முதல் 60 வயதை தாண்டிய உடல் உபாதை கொண்டருக்கும் முன்கள பணியாளர்களுக்கும் 3வது டோஸ் போட முடிவு செய்து இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    English summary
    When will people in Tamilnady get 3rd dose? When will children get their first shot? explains Minister Ma Subramaniam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X