டாப் இடத்தில் "தமிழகம்.." அண்டை மாநிலங்களுக்கு ஒரே வியப்பு! ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஓரே ஆண்டில் ஒரு துறை தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு ஓராண்டில் மட்டும் ஏற்றுமதி இந்த துறையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் உற்பத்தியில் டாப் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. இடையில் சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் முதலீடுகள் பெரியளவில் வரவில்லை என்றாலும் கூட இப்போது மீண்டும் முதலீடுகள் வர ஆரம்பித்துள்ளது.

இதனால் மாநிலத்தின் பொருளாதாரம் அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறது. இதற்கிடையே ஒரு துறையில் ஏற்றுமதி ஒரே ஆண்டில் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
எந்த துறை: தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2022 நிதியாண்டில் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி $1.86 பில்லியனாக இருந்த நிலையில், 20223 நிதியாண்டில் அது $5.37 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் முக்கிய நிறுவனங்களாக இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகாட்ரான் போன்ற நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் தான் உத்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை ஓவர்டேக் செய்து இந்தியாவில் டாப் இடத்தை தமிழ்நாடு பெற உதவி உள்ளது.
உயர்வு: கடந்த 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 15.59 பில்லியன் டாலராக இருந்த நிலையில், அதில் தமிழ்நாட்டின் பங்கு 11.98 சதவீதமாக இருந்தது. இப்போது மொத்த எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 23.57 பில்லியன் டாலராக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பங்களிப்பும் 22.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்திலும், கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், சால்காம்ப் மற்றும் பெகாட்ரான் உட்பட நாட்டின் 15 முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைத் தமிழ்நாட்டில் தான் இப்போது மேற்கொண்டு வருகிறது.
டாப் இடத்தில் தமிழ்நாடு: 2023ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு 5.37 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் 4.90 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்திலும், கர்நாடகா 4.52 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கடந்த 2022ஆம் நிதியாண்டில் 3.87 பில்லியன் டாலர் ஏற்றுமதியுடன் கர்நாடகா முதலிடத்தில் இருக்கிறது. உத்தரப் பிரதேசம் 3.77 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், மகாராஷ்டிரா 2.08 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. அப்போது தமிழ்நாடு டாப் 3இல் எந்தவொரு இடத்திலும் இல்லாத நிலையில் ஒரே ஆண்டில் டாப் இடத்திற்கு வந்துள்ளது.
என்ன காரணம்: தமிழ்நாட்டில் இப்போது தொழில் தொடங்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும் ஏற்கனவே இங்கே இருக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை விரிவுபடுத்த விரும்புவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு தொடர்ந்து புதுமைகளை ஊக்குவித்து வருவதே தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கக் காரணம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பாக இந்திய எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தலைவர் என் ராமச்சந்திரன் கூறுகையில், "தமிழ்நாட்டில் இப்போது நிலவும் நல்ல தொழில் சூழல், இங்கே கிடைக்கும் திறமையான அல்லது பயிற்சியளிக்கக்கூடிய தொழிலாளர்கள் தான் இங்கே முதலீடு அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. நிலையான மற்றும் உறுதியான மின்சார சப்ளை மற்றும் வலுவான விநியோகச் சங்கிலியும் இங்கே முக்கிய காரணமாக இருக்கிறது" என்றார்.
இப்போது மின்சார வாகனங்கள் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், பல மின் வாகன நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications