Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புரேவி" புயல் தமிழகத்தை எப்போது தொடும்.. இந்த 10 மாவட்டங்களில் உஷார்நிலை.. முழுவீச்சில் தென்தமிழகம்

புரேவி புயலால் தென் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரேவி புயல், இப்போதைக்கு பாம்பனுக்கு 530 கிமீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது.. இன்னும் 6 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளது... முன்னதாக, புரேவி புயலின் பெருமழையில் இருந்து தற்காத்துக்கொள்ள தென் தமிழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

பாம்பனுக்கு 530 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள புரேவி புயல் இன்று மாலை அல்லது இரவு திருகோணமலையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் நாளை அதாவது டிசம்பர் 3-ம்தேதி காலை மன்னார் வளைகுடாவிற்கு வரும். பின்னர் டிசம்பர் 4 அன்று அதிகாலையில் கன்னியாகுமரி, பாம்பன் இடையே கரையை கடந்து தமிழகத்திற்குள் நுழைய இருக்கிறது.

 10 மாவட்டங்கள்

10 மாவட்டங்கள்

இதனால், 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்,, சிவகங்கை, விருதுநகர், நாகப்பட்டினர், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 மீட்பு குழுவினர்

மீட்பு குழுவினர்

இதனிடையே, புரேவி புயல், பெருமழை ஆகியவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தென் தமிழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் வந்திருக்கிறார்கள்.. இவர்கள் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

 தாமிரபரணி

தாமிரபரணி

அதேபோல, திருநெல்வேலி மாவட்டத்துக்கு 60 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.. இவர்களில் ஒரு பிரிவினர் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டர்.. மற்றொரு பிரிவினர் கூட்டப்புளிக்கு சென்றுள்ளனர். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீபு குழுவினர் முகாமிட்டுள்ளனர்.. மொத்தம் 11 குழுக்களாக பிரிந்து மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.. பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு தேவையான கருவிகளை தயார்படுத்தினர்.. தனுஷ்கோடி, ராமேஸ்வரன், பாம்பன், சாயல்குடி போன்ற கடலோர பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

 கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்திலும் பேரிடர் மீபு குழுவினர் வந்துள்ளனர்.. மாவட்ட மக்களுக்கு ஸ்பீக்கர் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.. அதேபோல் தூத்துக்குடியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனவர்கள் யாரும் செல்லவில்லை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+