சட்டவிரோத வங்கதேச குடியேறிகள்.. ஆதார் கார்டுடன் தமிழகத்தில் "அடைக்கலம்".. தீவிர வேட்டையில் போலீஸ்!
சென்னை: தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட வங்கதேச குடியேறிகள் சட்டவிரோதமாக தங்கியுள்ளது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை அடுத்து அவர்களை கண்டறிய போலீஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கதேச குடியேறிகள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படுகிறது. மேலும் மேற்கு வங்கத்தினர் என கூறிக் கொண்டு தமிழகத்திற்கு வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.
சில இடைத்தரகர்கள் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தங்கியுள்ள அவர்கள் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை வாங்கிக் கொண்டது மட்டுமல்லாமல் ஆதார் அட்டைகளையும் பெற்றுக் கொண்டனர்.

மாவட்டங்கள்
இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் திருப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்கு வங்கத்தில் இருந்து வேலைக்காக வந்ததாக கூறி வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

வடமாநிலத்தவர்கள்
கொரோனா ஊரடங்கால் வடமாநிலத்தவர்கள் பலர் வேலையின்றி சொந்த மாநிலங்களுக்கு சென்றநிலையிலும் மேற்கு வங்கத்தினர் என கூறிக் கொண்ட இந்த வங்கதேச குடியேறிகள் சொந்த ஊருக்கு திரும்பி செல்லவில்லை. இந்த காலகட்டத்தில் இவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

ஆவணங்கள்
இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க இவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் ஆதார் கார்டை பெற்றுள்ளார்கள். போலியான ஆவணங்களை காட்டி ஆதார் கார்டை பெற்றார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கிக் கணக்கு
இந்த ஆதாரை வைத்து இவர்கள் அடையாள அட்டைகள், வங்கிக் கணக்கு திறக்க முகவரி சான்று அளித்துள்ளனர். வாகன சோதனையின் போதும், திடீர் ரெய்டுகளின் போது இவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதால் அவர்கள் மீது சந்தேகம் எழவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்போது சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications