ஊரக உள்ளாட்சி தேர்தல்.. திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி.. அதிமுக கூட்டணியும் அபாரம்
உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், வல்லுநர்கள் யாரும் கணிக்காத அளவில் முடிவுகள் வெளியாகி வருகிறது.
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்குமான தேர்தலில் அதிமுக கூட்டணியைவிட அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டிலும் நேற்று மாலையில் இருந்து திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.
இந்த தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கிய பதவிகளிலும் திமுக கட்சிதான் முன்னிலை வகித்து வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்னும் முழுமையடையவில்லை.
அதன்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் திமுக கூட்டணி 2338 , அதிமுக 2185, இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 272, அதிமுக 241 இடங்களில் வெற்றி பெற்றன. மொத்தத்தில் இரண்டிலும் திமுக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது.
நேற்று இரவே நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் தூத்துக்குடி தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. முழுமையான முடிவுகள் தெரிய இன்று விடியற்காலம் ஆகும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் 22 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications