4 வண்ண சீட்டுகள்.. ஒரு உள்ளாட்சிக்கு 3 மணி நேரம்.. உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எப்படி எண்ணப்படும்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை எண்ணுவதற்கு மிகவும் வித்தியாசமான முறை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 4 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதனால் மக்கள் 4 வாக்குகளை தேர்தலின் போது பதிவு செய்தார்கள். இதனால் இதில் வாக்குகளை எண்ணுவதும் கொஞ்சம் சிரமமான பணியாகும். அதேபோல் வாக்கு சீட்டு முறை என்பதால் வாக்குகளை எண்ணுவது அதிக நேரம் எடுக்கும்.

இதில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மொத்தம் 21 மேஜைகள் போடப்பட்டு இருக்கும். அங்குதான் வரிசையாக பணியாளர்கள் அமர்ந்து வாக்குகளை எண்ணுவார்கள்.
அதன்பின் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டு சீல் உடைக்கப்படும் . வாக்கு பெட்டி திறக்கப்பட்டு மொத்தமாக ஒரே இடத்தில் கொட்டப்படும்.
பின்பு வண்ணங்களுக்கு ஏற்றப்படி வாக்குகள் பிரிக்கப்படும். அதன்படி தேர்தலில் மொத்தம் 4 வண்ண வாக்குகள் பயன்படுத்தப்பட்டது. பதிவான 4 வண்ண ஓட்டு சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்படும்.
இதில் பெரும்பாலும் இன்று நள்ளிரவுதான் மொத்தமாக வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்.
இந்த வண்ண வண்ண வாக்கு சீட்டுகளை கட்டு கட்டாக பிரித்து எண்ணுவார்கள். மொத்தம் 50 எண்ணிக்கையாக ஒரு கட்டு கட்டப்படுகிறது.
இதனால் ஒரு ஊராட்சிக்கு மட்டும் குறைந்தது 3 மணி நேரம் வரை பிடிக்கலாம். மொத்தம் இந்த தேர்தலில் 2 லட்சத்து 31 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதனால் தேர்தல் முடிவு தெரிய நீண்ட நேரம் ஆகும்.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் முடிவு தெரிந்த பின் ஒலிபெருக்கி மூலம் முடிவுகள் கூறப்படும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications