சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. பலத்த போலீஸ் பாதுகாப்பு

இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், 74 மையங்களில் தற்போது எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி, 9-ம் தேதி ஆகிய 2 நாட்கள் தேர்தல் நடத்தப்பட்டது.

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளை தேர்வு செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்பட்டது..

TN Rural Local Body Election Results 2021 LIVE : ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் - வெற்றி யாருக்கு TN Rural Local Body Election Results 2021 LIVE : ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் - வெற்றி யாருக்கு

ஓட்டுக்கள்

ஓட்டுக்கள்

6-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத ஓட்டுகளும், 9-ம் தேதி நடந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் எண்ணிக்கை தொடங்கி உள்ளது.. இதற்காக 9 மாவட்டங்களில் 74 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த ஓட்டு எண்ணும் மையங்களை அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஓட்டுச்சீட்டு

ஓட்டுச்சீட்டு

எம்பி மற்றும் சட்டசபை தேர்தல் போல மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமாக தேர்தல் நடைபெறவில்லை.. பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.. வாக்கு எண்ணுவதை கண்காணிக்க சென்னையில் கன்ட்ரோல் ரூம் அறை அமைக்கப்பட்டுள்ளது... இதேபோல், மாவட்ட கலெக்டர் ஆபீசிலும் கன்ட்ரோல் ரூம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து அதிகாரிகள் இதை கண்காணிப்பார்கள்.

 பதவி ஏற்ப

பதவி ஏற்ப

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. .. மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 20-ம் தேதி நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் பதிவு செய்யப்படுகிறது...

பாதுகாப்பு

பாதுகாப்பு

அனைத்து ஏஜெண்டுகளையும் போலீசார் பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்... ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் உள்ளே செல்லும் ஏஜெண்டுகள் பேனா கொண்டு செல்ல அனுமதியில்லை.. பென்சில் மட்டுமே கையில் கொண்டு செல்லப்படுவார்கள்.. பதட்டமான பகுதிகள் சிலவற்றை அடையாளம் கண்டுள்ளனர்.. அந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைதவிர, ஆங்காங்கே அதிரடிப்படை போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

English summary
Tamilnadu Local Body Elections Vote counting today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X