அங்கிருந்து என்ன பண்றது? கழற்றிவிட்ட தங்கமணி! அப்படியே யூ டர்ன் போட்டு.. அதிமுகவை அதிர வைத்த "ரோஜா"!
நாமக்கல்: தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நடந்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில், பல்வேறு நகராட்சிகளில் ஏற்கனவே மேயர்கள், துணை மேயர்கள் பதவி ஏற்றுவிட்டனர்.
இன்னும் சில மாநகராட்சி, நகராட்சிகளில் பதவி ஏற்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் மொத்தமாக பதவி ஏற்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் நேற்று முதல்நாள் பதவி ஏற்ற நிலையில் இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நாமக்கல்
இந்த நிலையில் நாமக்கல் நகராட்சியில் அதிமுகவிற்கு கவுன்சிலர் ரோஜா ரமணி அதிர்ச்சி கொடுத்து உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மொத்த 5 நகராட்சிகள் உள்ளது. இதில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய 4 நகராட்சியை திமுகதான் வென்றது. அதிலும் நாமக்கல் மெயின் நகராட்சியை திமுகதான் வென்றது. இங்கு மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 36 திமுக கூட்டணி வென்றது. 2ல் சுயேட்சைகள் வென்றனர்.

சுயேட்சைகள்
இந்த நிலையில் தேர்தல் முடிந்ததும் இந்த சுயேட்சைகள் இருவரும் திமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுகவின் நாமக்கல் நகராட்சி கவுன்சிலர் பலம் 1 என்ற அளவிற்கு சுருங்கியது. அந்த ஒரு கவுன்சிலர்தான் ரோஜா ரமணி. இவர் முன்பு திமுகவில் இருந்தவர்தான். தேர்தல் நேரத்தில் திமுகவில் இடம் கிடைக்கவில்லை என்று அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் வந்து போட்டியிட்டு வென்றார். ஆனால் இங்கு இவர் தனியாள் ஆகிவிட்டார்.

நாமக்கல் அதிமுக
இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்கு பின் நாமக்கல் அதிமுக மாவட்ட செயலாளர் தங்கமணி இவரை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு கவுன்சிலர்தான் வென்று இருக்கிறார். இவரை போய் என் சந்தித்துக்கொண்டு என்று தங்கமணி சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் நேரத்திலும் தங்கமணி எந்த வேலையும் செய்யாமல் முடங்கியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில் 6ல் 4 தொகுதிகளையே திமுக கைப்பற்றியது.

தங்கமணி
அப்போதில் இருந்தே தங்கமணி பெரிதாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அவர் பெரிதாக பணிகளை செய்யவில்லை. இதையடுத்து அதிமுகவில் ஒற்றை ஆளாக இருந்து என்ன செய்வது என்று கோபம் அடைந்து ரோஜா ரமணி அப்படியே யூ டர்ன் போட்டு திமுகவில் இணைந்து இருக்கிறார். தங்கமணி சரியாக கண்டுகொள்ளாத காரணத்தால் விரக்தி அடைந்து இவர் திமுக பக்கம் தாவியதாக கூறப்படுகிறது. இதனால் நாமக்கல் எதிர்க்கட்சி இல்லாத நகராட்சியாக மாறியுள்ளது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications