இ பாஸ் தேவையில்லை.. இ பதிவு செய்தால் போதும்.. எப்படி விண்ணப்பிப்பது.. விளக்கமளித்த தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்திற்கு உள்ளே பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு இ பாஸ் முறை கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் லாக்டவுன் விதிகள் கடுமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் லாக்டவுன் விதிகள் தீவிரமாக்கப்படுகிறது.
இதையடுத்து வரும் மே 17ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களிளுக்கு உள்ளே பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இ பாஸ் தேவையில்லை மாறாக இ பதிவு அவசியம் என்று அரசு கூறியுள்ளது. இ பாஸ் மற்றும் இ பதிவிற்கான (registration) வேறுபாட்டை தமிழக அரசு அறிக்கை மூலம் விளக்கி உள்ளது.

இ பதிவு
இ பதிவு முறை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஒருசில தொலைக்காட்சி ஊடகங்களில், அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி ஒளிபரப்பப்படுகிறது.

எப்படி?
மாறாக,மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு(e-registration) செய்யலாம்.

ஆதாரம்
இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என்று தமிழக அரசு தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இ பாஸ் கிடைக்க பொதுவாக 2-3 நாட்கள் தாமதம் ஆகும். மாவட்டங்களுக்கு இடையில் அவசர பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு இது சிக்கலாகும்.

அத்தியாவசியம்
அதேபோல் திருமணம், மரணம் போன்ற அத்தியாவசிய பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கும் சிக்கலாகும். இதன் காரணமாக இ பாஸுக்கு பதிலாக இ பதிவை செய்துவிட்டு, அதற்காக வழங்கப்படும் ஆதராத்தை மட்டும் காட்டிவிட்டு பயணம் மேற்கொள்ளலாம். இதனால் 2-3 காத்திருக்கலாம் உடனே இ பதிவு செய்துவிட்டு, உடனுக்குடன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications