தமிழக தேர்தல் தேதி அறிவிச்சாச்சு! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தாச்சா? நாளைதான் கடைசி நாள்!
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளைதான் கடைசி நாள். எனவே சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அதற்குரிய ஆவணங்களுடன் சென்று ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம் என சத்யபிரத சாகு கூறியிருந்தார். அதன்படி மார்ச் 17ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். எனவே அதற்கு 10 நாட்களுக்கு முன்பு என்றால் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க நாளைதான் கடைசி நாள்.

டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகம், புதுவைக்கு ஒரே கட்டமாக அதுவும் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக தேர்தல் தேதி வைக்கப்பட்டதில் அவசர கதியில் நடத்தவில்லை. அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகளை கலந்து ஆலோசித்துதான் முடிவு செய்யப்பட்டது.
கடந்த முறை 2ஆம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே எப்போதும் இந்த கட்டத்தில்தான் தேர்தல் நடத்தப்படும் என சொல்ல முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பு கடைசி நாளாகும் என்றார்.
அதன்படி மார்ச் 27ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள். எனவே அதற்கு 10 நாட்களுக்கு முன்பு என்றால் நாளை மார்ச் 17ஆம் தேதிதான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாகும். இப்தார் நோன்பு கூட்டங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை. ஆனால் அங்கு வாக்கு சேகரிக்கக் கூடாது.
85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து வாக்களிக்கலாம். இதற்கு விரும்புபவர்கள் மனு அளிக்கலாம். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார். திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று முதலில் தவறாக இடம் பெற்று விட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் உள்ளது.
வாக்குப் பதிவுக்கு 7 நாட்களுக்கு முன்பு பூத் சிலிப் கொடுக்கப்படும். முதல்வர் அலுவலகம், அரசு அலுவலங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருக்கும் சூழல்களை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களிடம் ஆலோசனை பெற்றே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications