Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு முழுவதும் மகா சிவராத்திரி பூஜைகள்.. கோவில்களில் விடிய விடிய தங்கி வழிபாடு செய்த பக்தர்கள்

தமிழ்நாட்டில் பக்தி பரவசத்துடன் மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு தொடங்கிய் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

பொதுவாக சிவாலயங்களில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். சிவாலயங்களில் முதன்மை விழா என்பது சிவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், தேய்பிறை திரயோதரி, சதுர்த்தசி இணையும் நாள் இரவு மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

Tamilnadu: Maha Shivaratri celebrated, devotees throng Shiva temples

இந்த ஆண்டும் அனைத்து சிவாலயங்களிலும் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆண்டு சனி மகாபிரதோஷத்துடன் இணைந்து மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு சிவன் ஆலயத்தில் நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் சிவாலயங்களிலேயே தங்கி நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்றனர். இதனால் சிவாலயங்களில் விடிய விடிய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு 11மணிக்கு முதல் ஜாம பூஜையும் அதிகாலை 1மணிக்கு 2-ம் ஜாம பூஜையும் நடைபெற்றன. விடிகாலையில் 3 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இந்த மூன்றாம் கால பூஜையில் பஞ்சமூர்த்திகள் கோவில்களில் வலம் வந்தனர். இறுதியாக 5 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் பெருமளவு அலைமோதியது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்திருந்தனர். சதுரகிரி மலையில் நேற்று நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருத்தணி முருகன் கோவிலிலும் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு 2-ம் கால பூஜைகள் நடைபெற்றன. அப்போது 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் புகழ்பெற்ற சோழர் கால பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி, சனி மகா பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 1030 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 1.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, விடிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் பரத நாட்டிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இக்கோவிலில் சரக்கொன்றை நாதருக்கு தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷம், மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு ஓசூர் மல்லிகார்ஜூன சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலயங்களுக்கான சிவாலய ஓட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி, சனி பிரதோஷம் இணைந்து வந்ததால் தஞ்சை பெரிய கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். சிவாலயங்களுக்கு ஓட்டமாக ஓடுவது கன்னியாகுமரி மாவட்ட ஆன்மீக நிகழ்ச்சிகளில் சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவராத்திரி நிகழ்வுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மிகச் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+