ரூ.4,100 கோடி பரிவர்த்தனைக்கு கணக்கு காட்டாத தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி.. ஐடி ரெய்டில் ஷாக்!
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் திடீரென 2 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் தான் பல்வேறு வகையான பரிவர்த்தனைகளில் மொத்தம் ரூ.4,100 கோடிக்கு கணக்கு காட்டப்படாமல் மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் ஷாக் தகவலை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்நிலையில் தான் திடீரென்று வருமான வரித்துறையினர் அந்த வங்கியின் தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள தலைமையகத்தில் சோதனை நடத்தினர்.

கடந்த 27 ம் தேதி 4 கார்களில் சென்ற 16 வருமான வரித்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அதன்பிறகு மறுநாள் காலையிலும் தொடர்ந்து நடந்தது. இதையடுத்து 28 ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்தது.
இந்த சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்நிலையில் தான் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் முக்கிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக வருமான வரித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தலைமையகத்தில் 2 நாள் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் ரூ.110 கோடி பரிவர்த்தனை தொடர்பாக வங்கி நிர்வாகம் தகவல் அளிக்கவில்லை.
மேலும் 10,000 வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை குறித்த விபரங்களையும் அளிக்கவில்லை. மேலும் வங்கி சார்ந்த ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான விபரங்கள் கணக்கில் காட்டவில்லை. இந்த பரிவர்த்தனைகள் உள்பட மொத்தம் ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைக்கு வங்கி நிர்வாகம் கணக்கு காட்டவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications