தமிழகத்தில் 'இந்த' காரணத்தால் 2026க்கு முன்பே சட்டசபை தேர்தல் வரலாம்.. பகீர் கிளப்பும் செல்லூர் ராஜூ
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் 2026-க்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இன்று காலை முதலே எஸ். பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடக்கும் அதிரடி ரெய்டு தான் பேசுபொருளாகியுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்த போது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ் பி வேலுமணி
எஸ் பி வேலுமணி மட்டுமின்றி அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோவையில் வடவள்ளியில் பகுதியிலுள்ள வேலுமணி உறவினர் சந்திரசேகர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

2026க்கு முன் தேர்தல்
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "சமீப காலங்களாக திமுகவில் இணைந்துள்ளவர் அனைவரும் கடந்த காலங்களில் முறைக்கேடாக வருமானத்திற்கு அதிகமாகப் பணம் சம்பாதித்தவர்கள் தான். இது அனைவருக்கும் தெரியும். இதனால் யாருக்குத் தெரியும், வரும் 2026ஆம் ஆண்டுக்கு முன்னரே தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை" என்று தெரிவித்தார்.

அதிமுக கண்டம்
எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனை அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஓபிஎஸ் & ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதாரம் இன்றி ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பழி வாங்குவதை விட்டுவிட்டு மக்கள் பணியில் திமுக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்
அதேபோல வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், "இந்த சோதனை அரசியல் வாங்கும் நடவடிக்கை தானே தவிர வேறு எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் எங்கள் முடக்கி வைக்கவே இது போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்துள்ளது. ஆனால், ஒன்றை மறந்துவிட்டார்கள், இதுபோல எந்தவொரு நடவடிக்கையும் எங்களைச் சோர்வடைய வைக்காது" என்று காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications