அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2 முக்கியமான துறை.. இஸ்லாமியர்களை அமைச்சராக்கிய ஸ்டாலின்.. அசத்தும் திமுக!
சென்னை: தமிழக அமைச்சரவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு முக்கியமான துறைகளுக்கு திமுக தலைவர்கள் ஸ்டாலின் செஞ்சி மஸ்தான், ஆவடி நாசர் ஆகியோரை அமைச்சர்களாக நியமித்து அசத்தி உள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பதவி ஏற்க உள்ள நிலையில், அவருடன் 33 அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க உள்ளனர். இந்த 33 அமைச்சர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மூத்தவர்கள், இளைஞர்கள், பல ஜாதியினர் என்று பல தரப்பினருக்கும் வாய்ப்புகளை கொடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்பான அமைச்சரவையை தேர்வு செய்துள்ளார். அதன்படி தமிழக அமைச்சரவையில் திமுக சார்பாக 2 இஸ்லாமியர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

யார்?
இதில் தொடக்கத்தில் இருந்தே தமிழக சட்டசபையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் யார் என்ற கேள்வி இருந்தது. திமுகவில் இந்த துறையை பெற போகும் எம்எல்ஏ யார் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் முடிந்த நாளில் இருந்தே இருந்தது. சிஏஏ, என்ஆர்சி, இஸ்லாமியர்களுக்கு எதிரான மனப்போக்கு என்று பல அழுத்தங்களுக்கு இடையே இந்த துறை அதிக கவனம் பெற்றது.

கவனம்
இதனால் திமுக தேர்வு செய்ய போகும் நபர் யார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் செஞ்சி. கே.எஸ் மஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். செஞ்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டு மஸ்தான் மீண்டும் பெற்றிபெற்றுள்ளார். இவர் பா.ம.க. வேட்பாளரை விட கூடுதலாக 35,803 வாக்குகள் பெற்றார்.

முக்கிய துறை
இந்த நிலையில் தற்போது சிறுபான்மையினர் நலத்துறை, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை, அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள், வக்பு வாரிய துறை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு அதேபோல் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பால்வளத்துறை அமைச்சர் பதவி யாருக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

பாராட்டு
இந்த பதவி ஆவடி தொகுதியில் மாஃபா கே பாண்டியராஜனை 55275 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுகவின் சா.மு. நாசருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாஃபா கே பாண்டியராஜனை அவரின் வலுவான தொகுதியில் வீழ்த்தியதை அங்கீகரிக்கும் வகையிலும், அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் இவருக்கு பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications