மறுபடி ஒரு உச்சம்.. தமிழகத்தில் இன்று 1384 பேருக்கு கொரோனா.. இதுவரை இல்லாத அளவு பரிசோதனை அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்றுமட்டும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம், 27 ஆயிரத்து 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை நிலவரம்
தமிழ்நாட்டில் இன்று 5ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியுள்ளது கவனிக்கத்தக்கது. சென்னையில் மட்டும் இன்று 1,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. 18693 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் மொத்த பாதிப்பு
தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னையில் ஒரு நாளைய பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக உள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டு பாஸிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதில் 16,964 பேர் ஆண்கள். 10,278 பேர் பெண்கள், 14 பேர் திருநங்கைகள்.

பரிசோதனை அளவு
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 15,991 பேருக்கு பரிசோதனை செய்து உள்ளனர். இது ஒரு நல்ல செய்தியாகும். ஏனெனில் அதிகம் பேரை பரிசோதனை செய்வது கொரோனா பரவலை குறைக்கும். பரிசோதனை செய்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால்தான், கொரோனா பிறருக்கு பரவும் வேகம் குறையும்.
Recommended Video

கொரோனா பரிசோதனை
இதுவரை தமிழகத்தில் மொத்தம், 5 லட்சத்து 20 ஆயிரத்து, 286 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தின் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 74 என்ற அளவில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 14,901 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications