தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-2 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு இன்று தமிழகத்தில் 2 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,41,547 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 1,53,242 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இந்தியாவில் 5-வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை தமிழகத்தில் 1,52,67,910 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

புதியதாக பாதிப்பு
தமிழத்தில் இன்று மட்டும் மொத்தம் 586 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் இன்று 673 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் தற்போது 4,984 பேருக்கு கொரோனா சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,34,171 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,16,878 ஆகும்.

மொத்த மரணங்கள்
தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,309. இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 26 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள்து.

சென்னை நிலவரம்
சென்னையில் இன்று 153 பேருக்கும் செங்கல்பட்டில் 51, கோவையில் 47 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4085 ஆகும். சென்னைக்கு அடுத்ததாக செங்கல்பட்டில் 762 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications