தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. வாக்குப் பதிவு நிறைவு.. 70 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தலில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. தோராயமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
27 மாவட்டங்களில் 46, 639 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

மொத்தம் 91, 975 பதவிகளில் 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 2-ஆம் கட்ட தேர்தலில் மீதமுள்ள 46,639 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
158 ஊராட்சி ஒன்றியங்களில் 38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4,924 பஞ்சாயத்து தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த இரு கட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications