சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு வைத்த ஸ்பெஷல் கோரிக்கை.. தயாரானது "எக்சிட் பிளான்".. லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் நாளையில் இருந்து முக்கியமான தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் நாளையில் இருந்து முக்கியமான தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள். இதற்கான எக்சிட் பிளானை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

Recommended Video

    National Lockdown 4.0: அதிக தளர்வுகள்... லாக்டவுன் 4.0 குறித்து வெளியான தகவல்கள்

    இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கள் கிழமைக்குள் வெளியாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்த லாக் டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    மேலும் 2 வாரம்.. பெரிய அளவில் வரும் தளர்வுகள்.. லாக்டவுன் 4.0 குறித்து வெளியான முக்கிய விவரங்கள்! மேலும் 2 வாரம்.. பெரிய அளவில் வரும் தளர்வுகள்.. லாக்டவுன் 4.0 குறித்து வெளியான முக்கிய விவரங்கள்!

    தமிழக அரசின் எக்சிட் பிளான்

    தமிழக அரசின் எக்சிட் பிளான்

    இந்த நிலையில் இதற்காக மாநில அரசுகளிடம் எக்சிட் பிளான்களை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு கேட்டு இருந்தது. அதாவது கொரோனா லாக்டவுனை எப்படி படிப்படியாக நீக்குவது என்பது தொடர்பாக எக்சிட் பிளான்களை மத்திய அரசு கேட்டு இருந்தது. இதன் மூலமே லாக்டவுன் 4.0விற்கான திட்டங்கள் வகுக்கப்படும். இந்த நிலையில் தமிழக அரசு தனது எக்சிட் பிளானை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த லாக்டவுன் நீட்டிப்பு குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு ஸ்பெஷல் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளது. பொருளாதார மையங்களை திறக்கவும், அலுவலக செயல்பாடுகளை அனுமதிக்கவும் தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது. தமிழக அரசு அனுப்பிய எக்சிட் பிளான் அறிக்கையிலும் இது குறித்து கூறப்பட்டுள்ளது .

    என்ன தளர்வுகள்

    என்ன தளர்வுகள்

    அதன்படி தமிழகத்தில் பின்வரும் முக்கியமான தளர்வுகள் வரும் என்று கூறுகிறார்கள்.

    • பேருந்துகள், மெட்ரோ, மின்சார ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
    • நிறுவனங்கள், கடைகள் கூடுதல் நேரம் இயங்க அனுமதி அளிக்கப்படும்.
    • சிவப்பு மண்டல பகுதிகளில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்படும்.
    • தொழிற்சாலைகள் கூடுதல் நேரம் இயங்க அனுமதிக்கப்படும்.
    • கடைகள் அதிக அளவில் இயங்க தொடங்கும்.
    • மக்கள் வெளியே வருவதற்கான கட்டுப்பாடுகள் குறையும்.
    • மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
    சென்னை நிலை

    சென்னை நிலை

    அதேபோல் சென்னையிலும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் குறையும் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபியில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சென்னையில் கட்டுப்பாடுகள் வரும். சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் கூட, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறுகிறார்கள்.

    கட்டுப்பாட்டு பகுதி எப்படி

    கட்டுப்பாட்டு பகுதி எப்படி

    ஆனால் தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறுகிறார்கள். அதாவது ஒரே இடத்தில் 5க்கும் அதிகமான கேஸ்கள் இருந்தால் அந்த பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகள் என்று அறிவிக்கப்படும். இங்கு தளர்வுகள் இருக்காது . இங்கு தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

    https://www.oneindia.com/photos/tasmas-opened-again-people-standing-outiside-in-line-58205.html

    English summary
    Tamilnadu summits its Exit plan for Lockdown 4 to center amid surge in Coronavirus cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X