ஓவரா கூவுன நாங்க எல்லாம் இப்போ.. தள்ளு தள்ளு தள்ளு!.. அடர்ந்த மேகங்கள் எங்கே.. வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை நோக்கி அடர்ந்த மேகக் கூட்டங்கள் வந்து கொண்டிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த கட்டமாக தமிழகம், புதுவை, காரைக்கால் வழியாக ஆந்திராவை நோக்கி நகரக் கூடும். தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, சேலம், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று மதியத்திற்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது அடுத்த நாள், அதாவது நாளை காலை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது.

வங்கக் கடல்

வங்கக் கடல்

வங்கக் கடலில் காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். தமிழகத்தில் இன்று முதலில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இன்று இரவுக்கு மேல் கள்ளக்குறிச்சி, கடலூர், புதுவை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வெதர்மேன்

வெதர்மேன்

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காலை வேளைகளில் மேகக் கூட்டங்கள் நிலை கொண்டிருப்பதும் மழை பெய்வதும் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் லேசான தூறல் இருக்கும். மேகக் கூட்டங்கள் நிலப்பகுதிக்கு நகர்கிறதாா என்பதை தெரிந்து கொள்ள நல்ல மழைக்கு இரவு வரை நாம் காத்திருக்க வேண்டும்.

 கடலோர பகுதி

கடலோர பகுதி

காற்றழுத்தம் நமது கடலோர பகுதியில் அடுத்த இரண்டு முதல் 3 நாட்களுக்கு குறைந்த காற்றழுத்தமாகவே நீடித்து இருக்கும் என தெரிவித்திருந்தார். அது போல் தற்போது அவர் ஒரு முக்கிய அப்டேட்டை கூறியுள்ளார். மேலும் ஒரு போஸ்ட்டில் ஓவரா கூவுன நாங்கலாம் இப்ப சென்னைக்கு மேகக் கூட்டங்களை தள்ளு தள்ளு மோடில் தள்ளி கொண்டிருக்கிறோம். மழை வரும் வரை இப்படி மீம்ஸ் போட்டு எஸ்கேப் ஆக வேண்டியதுதான்.

இரவு மழை இருக்கும்

இரவு மழை இருக்கும்

மீம்ஸை விடுங்கள்! அடர்ந்த மேக் கூட்டங்கள் சென்னைக்கு 100 கிமீ. தூரத்தில் நுழைவதற்கு காத்திருக்கின்றன. இந்த மேகக் கூட்டங்கள் இரவு நேரத்தில் எந்த அளவுக்கு தீவிரமடையும் என்பதை பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு வெதர்மேனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். அவருக்கென பேன்ஸ் பக்கமே இருக்கிறது. கடந்த இரு தினங்களாக மழை வருகிறது என்றும் திங்கள், செவ்வாய்க்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை வரும் என கூறியிருந்தார். மேலும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

வானிலை ஆய்வாளர்கள்

வானிலை ஆய்வாளர்கள்

மேலும் நேற்று இரவு முதல் மழை பெய்யும் என கூறியிருந்த நிலையில் அதுவும் நடக்காததால் இத்தகைய மீமை போட்டுள்ளார். அதாவது தானும் (பிரதீப் ஜானும் ), மற்ற தனியார் வானிலை ஆய்வாளர்களும் இப்படி மழை வரும் மழை வரும் என சொல்லிக் கொண்டு வருகிறோம் என்பதை காற்றழுத்தத்தை லாரி என குறிப்பிட்டு வழியில் நின்ற லாரியை தள்ளு தள்ளு என தள்ளி மேகங்களை 100 கி.மீ. தூரத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+