சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் ஃபிலிம் காட்டும் காற்றழுத்தம்! சென்னையில் இன்று மழை வருமா? வெதர்மேனின் 15 ஆண்டு டேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: காற்றழுத்தம் சென்னையை நெருங்குவதாக அதிகாரப்பூர்வ வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் பொதுவாக இந்த நேரத்திற்கு 100 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். எனவே இன்று காலை மழை எப்படி இருக்கும் என்பது தெரியும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாக தீவிரமடைந்து தற்போது குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது. இந்த காற்றழுத்தம் வலுவிழந்து தமிழக கடலோரத்தில் நிலை கொண்டிருக்கிறது.

இந்த காற்றழுத்தத்தின் நிலை குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: சென்னையை காற்றழுத்த தாழ்வுநிலை நெருங்குகிறது. சென்னை நோக்கி மணிக்கு 20கிமீ வேகத்தில் உள்ள நிலையில் இது இன்று நள்ளிரவு தீவிரமடையும்.

காற்றழுத்தம் எங்கே இருக்கிறது?.. தமிழகம் நோக்கி நகர்கிறதா?.. என்ன சொல்கிறது வெதர் ரிப்போர்ட்? காற்றழுத்தம் எங்கே இருக்கிறது?.. தமிழகம் நோக்கி நகர்கிறதா?.. என்ன சொல்கிறது வெதர் ரிப்போர்ட்?

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென் ஆந்திரா, வடதமிழகம் இடையே கரையை கடக்கும். சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 350 கிமீ தொலைவில் நிலவி வருகிறது. இந்த நிலையில் இது போல் காற்றழுத்தம் உருவாகி மழை தராமல் இப்படி சென்னையை காக்க வைக்கும் சம்பவம் கடந்த 15 ஆண்டுகளில் நடந்துள்ளதாக வெதர்மேன் டேட்டாக்களுடன் போஸ்ட் போட்டுள்ளார்.

 காற்றழுத்தம் தீவிரமடையும்

காற்றழுத்தம் தீவிரமடையும்

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காற்றழுத்தம் தீவிரமடையும் என வானிலை மையம் கணித்துள்ளது. இது போல் சூழலில் சென்னையில் குறைந்தது 100 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். எனினும் பெய்யவில்லை. இன்று காலை இந்த மழை எப்படியிருக்கும் என்பது தெரியும். காற்றழுத்தம் வங்கக் கடலில் எந்த ஆக்ஷனையும் செய்யாமல் நிலவி கொண்டிருப்பது இது முதல் முறையல்ல.

 பேதை புயல்

பேதை புயல்

சென்னைக்கு மழை வரும் என காத்திருந்து ஏமாந்த தருணங்களை தொகுத்து வழங்கியுள்ளேன். அவற்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் பேதை புயல் மோசமான அனுபவத்தை கொடுத்ததை மறக்க முடியாது. அந்த சம்பவங்கள் உங்களுக்காக இதோ! வடகிழக்கு பருவமழை காலத்தின் போது கடந்த 2018 ஆம் ஆண்டு பேதை புயல் உருவாகியது. இந்த புயலால் மேற்கு பகுதி மேகங்கள் சென்னை மீது நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு 50 கி.மீ. தூரத்தில் கடலில் அடர்த்தியான மேக கூட்டங்கள் இருந்தாலும் சென்னைக்கு மழையை கொடுக்கவில்லை. காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசியது. அன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை 26.8 செல்சியஸாகும். அந்த நாளில் அதிக குளிர் காணப்பட்டது.

ஜல் புயல்

ஜல் புயல்

அது போல் கடந்த 2010 ஆம் ஆண்டு உருவான ஜல் புயலின் போது, மணிக்கு 100 கி.மீ. வேரத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது முறையாக செயல்படவில்லை. திருக்கழுக்குன்றத்தில் 220 மி.மீ. மழையையும், கல்பாக்கத்தில் 110 மி.மீ. மழையையும் கொடுத்தது. சென்னையில் 50 மி.மீ. மழை பெய்தது. காற்றின் வேகம் மணிக்கு 60 கிமீ. வேகத்தில் வீசியது. அன்றைய தினம் மிகவும் குளிர்ந்த காற்று வீசியது. வெப்பநிலை 26.1 செல்சியஸாக இருந்தது.

 கஜா புயல்

கஜா புயல்


கஜா புயலின் போது 2018ஆம் ஆண்டு செங்கல்பட்டு பகுதியில் இருந்த மேகக் கூட்டங்கள் சென்னை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மேகங்கள் அங்கேயே நின்றுவிட்டன, சென்னைக்கு வரவில்லை. இதனால் செங்கல்பட்டில் 110 மி.மீ. மழையும் திருப்போரூரில் 85 மி.மீ. மழையும் பெய்தது. சென்னையில் 5 முதல் 10 மி.மீ. மழை பெய்தது. சென்னையில் குளிர்ந்த காற்று கூட வீசவில்லை.

மடி புயல்

மடி புயல்

கடந்த 2013 ஆம் ஆண்டு மடி புயலின் போது அந்த ஆண்டு ஏற்பட்ட காற்றழுத்தங்களும் புயலும் ஆந்திரா அல்லது ஒடிஸாவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மடி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தென்மேற்கு காற்றின் தாக்கத்தால் செய்யூரில் 105 மி.மீ. மழை பெய்தது. காற்று அந்த அளவுக்கு வீசவில்லை. அன்றைய தினம் 27.6 டிகிரி செல்சியஸாக இருந்தது.

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆழ்ந்த காற்றழுத்தமானது உருவானது. வரலாற்றில் மோசமான நவம்பரில் அந்த ஆண்டு நவம்பரும் ஒன்றாகும். தென்மேற்கு காற்றின் தாக்கத்தால் செங்கல்பட்டில் 140 மி.மீ. மழையும் திருப்பதியில் 140 மி.மீ மழையும் பெய்தது. அந்த அளவுக்கு காற்று வீசவில்லை. சென்னையில் 1 முதல் 5 மி.மீ. மழை பெய்தது. காற்றை போல் மழையும் அந்த அளவுக்கு பெய்யவில்லை.

கைமுக் புயல்

கைமுக் புயல்

கடந்த 2008 ஆம் ஆண்டு கைமுக் புயலின் போது வறண்ட நவம்பராக இருந்தது. வடக்கு நோக்கி வந்த மேக கூட்டங்கள் சென்னையில் நிலவும் என எதிர்பார்த்தோம். ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் 50 முதல் 70 மி.மீ. மழையை கொடுத்தது. அது போல் சென்னையில் 15 முதல் 20 மி.மீ மழை பெய்தது. காற்றின் வேகமும் மணிக்கு 40 கி.மீ. இருந்தது. அன்றைய தினம் வெப்பநிலை 28.7 ஆக இருந்தது. இவ்வாறு 15 ஆண்டுகளில் நடந்த விஷயங்களை தமிழ்நாடு வெதர்மேன் தொகுத்துள்ளார்.

English summary
Weather update: Tamilnadu Weatherman Pradeep John complies about last 15 years of tracking of depression missed rains and waiting for rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X