சென்னைக்கு பிரேக்!.. தென் சென்னையிலிருந்து கடலூருக்கு ஷிஃப்ட்டாகும் மேக கூட்டங்கள்.. வெதர்மேன்
சென்னை: தென் சென்னையில் உள்ள மேக கூட்டங்கள் அப்படியே கடலூர் பெல்டிற்கு மாறுகிறது என்றும் சென்னையில் அங்கும் இங்கும் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவும் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் முக்கிய சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழை பெய்துள்ளது.
இது நாளை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதி மக்கள்
இதனால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக்கில் கூறுகையில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கும் இங்கும் மழை
இதனால் சென்னை நகருக்கு ஓய்வு என்பது தேவை. இதனால் சென்னையின் சில இடங்களில் அங்கும் இங்கும் மழை பெய்யும். ஒட்டுமொத்தமாக மழை மேகங்கள் சென்னையின் தென் பகுதியிலிருந்து கடலூர் பகுதிக்கு செல்கிறது. பூண்டியில் 3870 கனஅடி நீர் அதிகரித்துள்ளது. அது போல் புழலில் 500 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பு
நேரத்திற்கு நேரம் அரசு அறிவிப்பை கண்காணிக்குமாறு வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார். 2015 ஆம் ஆண்டு பெய்த மழைக்கு பிறகு இன்றுதான் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது. குறிப்பாக வடசென்னை வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு வசிப்போர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இரு காற்றழுத்தம்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது, இன்னும் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினால் எந்த அளவுக்கு மழை கொட்டும் என மக்கள் இப்போதே அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications