என்னன்னே தெரியலைங்க.. கார்த்தாலே.. திடீர்னு மழை... அண்ணாநகர் பக்கம் அப்படியே ஸ்வீட் ஷாக்காயிட்டாங்க!
Recommended Video
சென்னை: என்னன்னே தெரியலை, வானிலை மையமும் அறிவிக்கவில்லை, ஆனால் திடீர்னு சென்னை அண்ணா நகரில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி கலந்து சந்தோஷம் அடைந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கம் போல் பொய்த்துவிட்டது. அந்த அளவுக்கு மழையில்லை. எனினும் சிறிய நாட்களில் நிறைய மழை பெய்ததால் தமிழகத்தில் நீர் நிலைகள் நிரம்பி விட்டதாக சொல்லப்படுகிறது.
இது எந்தளவுக்கு கோடை காலத்தில் கை கொடுக்கும் என தெரியவில்லை.

பலனளிக்கவில்லை
இந்த வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்திற்கு சாதகமாக குறிப்பாக சென்னைக்கு சாதகமான எந்த ஒரு புயலும் உருவாகவில்லை. இதனால் ஏமாற்றமே விஞ்சியது. தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கை கொடுத்த அளவிற்கு வடகிழக்கு பருவமழை பலன் அளிக்கவில்லை என்றே சொல்லலாம்.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதத்துடன் ஓய்ந்துவிட்டது. இதையடுத்து குளிர்காலம் தொடங்கியது. வானிலை மையத்தின் அறிக்கையை பார்த்து பார்த்து ஏமாற்றமே விஞ்சியது. இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா நகரில் நல்ல மழை பெய்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார்.

மகிழ்ச்சி
அது போல் நாவலூரிலும் 5 நிமிடங்களுக்கு நல்ல மழை பெய்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மழை எதற்காக பெய்தது என தெரியவில்லை. ஆனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர் வாட்டி வதைத்தாலும் மழையை மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு இந்த மக்கள் அடைந்த மகிழ்ச்சியே சாட்சியாகும்.

திடீர் மழை
அது ராமாபுரத்திலும் 2 நிமிடங்களுக்கு மழை பெய்துள்ளது. கீழ்ப்பாக்கம், கொளத்தூரிலும் மழை பெய்தது. செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழை ஈரப்பதத்தினால் ஏற்பட்டதா இல்லை காற்றின் மேலடுக்கு சுழற்சியால் ஏற்பட்டதா இல்லை வெப்பச்சலனத்தால் பெய்ததா என தெரியவில்லை. இதே போன்று இதே பிப்ரவரி 4-ஆம் தேதி கடந்த ஆண்டும் திடீர் மழை பெய்ததாக மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications