சென்னைக்கு அருகே எப்படி இருக்கு பாருங்க.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த சூப்பர் அப்டேட்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே அடர்த்தியான மேககூட்டங்கள் இருப்பதால், அவற்றால் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும், கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் நகரின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

இந்நிலையில், இரவு ஏழு மணியளவில் திடீரென மழை பெய்தது. சைதாப்பேட்டை, தி.நகர், வடபழநி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

வெதர்மேன்

வெதர்மேன்

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னைக்கு ஒரு நல்ல தகவலை கூறியிருக்கிறார். இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக அவர் தனது ட்விட்டில் கூறியிருந்தார். இதன்படியே இன்று மழை பெய்துள்ளது,

அடர்த்தியான மேகக்கூட்டங்கள்

அடர்த்தியான மேகக்கூட்டங்கள்

அவர் தனது ட்விட்டில், இன்றும் நாளையும் சென்னையில் மிதமான மழை பெய்யும். சென்னையின் கடற்பகுதியை ஒட்டி சற்று தொலைவில் அடர்த்தியான மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. அது கிழக்கு நோக்கி நகரும். எனவே இன்றும் நாளையும் சென்னையில் மிதமான மழை பெய்யும்.

டெல்டாவில் மழை

டெல்டாவில் மழை

இதேபோல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா பகுதியிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் புத்தாண்டு அன்று வானம் தெளிவாக காணப்படும் என்றார்.

என்ன சொல்கிறது

என்ன சொல்கிறது

இதனிடையே நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகரில், வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 30; குறைந்தபட்சம், 21 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும் என்று கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+