"தமிழ்நாட்டின் நலன் உங்கள் கையில்" அதிமுக தொண்டர்களை அலர்ட் செய்யும் திருமாவளவன்!

தமிழ்நாட்டின் நலன் அதிமுக தொண்டர்கள் கைகளில் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற பார்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் முடிவை விடவும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தமிழ்நாட்டு நலன்களோடு தொடர்புடையது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக வாக்கு சேகரிப்பு பணிகளும் தொடங்கியுள்ளன.

ஆனால் அதிமுக தரப்பில் இதுவரை வேட்பாளர் தேர்வு கூட முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு வேட்பாளரையும், ஓபிஎஸ் அணி தரப்பில் ஒரு வேட்பாளரையும் நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரு அணிகளும் பாஜகவின் ஆதரவை பெறுவதில் மும்முரமாக இருந்து வருகின்றனர்.

பாஜக - அதிமுக

பாஜக - அதிமுக

இதற்காக சில நாட்களுக்கு முன் ஒரு அணிகளின் நிர்வாகிகளும் கமலாலயம் சென்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். இருப்பினும் பாஜக தரப்பில் எந்த அணிக்கு ஆதரவு என்று இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேபோல் பாஜகவின் ஆதரவை பெற அதிமுக தலைவர்கள் மும்முரமாக இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சியடைந்து வருவதாக அக்கட்சியினரால் பேசப்பட்டு வருகிறது.

விசிக ஆலோசனை

விசிக ஆலோசனை

இந்த நிலையில் சென்னை போரூரில் விசிக சார்பில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, மூன்று மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், சனாதன சக்திகளை இந்த மண்ணில் வேரூன்ற ஏராளமான வழிகளில் முயற்சி செய்து வருகிறது.

அதிமுக, பாமக

அதிமுக, பாமக

அதிமுகவையும், பாமகவையும் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் முயற்சியை தடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அதிமுக என்ற அரசியல் கட்சியை பாஜகவின் முயற்சிகளுக்கு இரையாக்கிவிடுவார்களோ என்ற ஒரு சூழல் தான் இன்றைக்கும் இருக்கிறது. இதனை அதிமுக தொண்டர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உண்மையான எம்ஜிஆர் தொண்டர்களாகவும், ஜெயலலிதாவை பின்பற்றக் கூடியவர்களாகவும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் சங்பரிவார்களுக்கு ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.

அதிமுக தொண்டர்கள்

அதிமுக தொண்டர்கள்

எந்த சூழலிலும் அதிமுகவின் சங்கபரிவார்களுக்கு துணை போகவும் கூடாது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கிறார், ஓபிஎஸ் என்ன முடிவெடுக்கிறார் என்பதை விட, அதிமுக தொண்டர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு நலன்களோடு தொடர்புடையது. அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+