பலத்த காற்று வீசும்.. தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் செம நியூஸ்!

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

நாடு முழுக்க பல இடங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

பெங்களூரில் தினமும் மழை பெய்து வருகிறது. அதேபோல் கேரளாவில் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழகம் அப்படி இல்லை

தமிழகம் அப்படி இல்லை

ஆனால் தமிழகத்தில் அந்த அளவிற்கு மழை பெய்வது இல்லை. கேரளா அருகே இருக்கும் சில மாவட்டங்களில் மட்டும் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மற்ற இடங்களில் பெரிய அளவில் மழை இல்லை. பருவமழை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டாலும் இன்னும் தீவிரமாக எங்கும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் நல்ல செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறது.

இன்று மழை

இன்று மழை

அதன்படி தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரங்களுக்கு தீவிரமாக மழை பெய்யும் என்று வானிலை மையும் கூறியுள்ளது.

புயல்

புயல்

கேரள, கர்நாடக கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கேரளா அருகே இருக்கும் மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசும். அதேபோல் கன்னியாகுமரியில் பலத்த காற்று வீசும்.கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை நிலைமை

சென்னை நிலைமை

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு மேல் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தீவிரமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் காவிரியில் நீர் வரத்து வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் காவிரியில் தலைமடைக்கு தண்ணீர் வராத நிலையில் இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+