குளுகுளு தமிழ்நாடு.. தினம் தினம் அதிகரிக்கும் குளிர்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் குளிரான வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும் என்று ஏற்கனவே சென்னை வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறையும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

செல்சியஸ்
அதேபோல் அதற்கு அடுத்த 2 நாட்கள் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். மொத்தத்தில் 4 நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை மையம் அறிவித்தது போலவே தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து வருகிறது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அப்டேட்டில், வடதமிழ்நாட்டின் உட்பகுதியில், தெற்கு மற்றும் உள் கர்நாடகாவிலும் குளிர் நீடிக்கும். குளிரான இரவுகள் இங்கு தொடர்ந்து நீடித்து வரும். அதேபோல் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள், கேரளா, விஷாகப்பட்டினம் மலைப்பகுதிகளில் குளிர் நீடிக்கும்.

வெப்பநிலை விபரம்
நேற்று பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை விவரம்
- ஜி மடுகுலா 5.4 டிகிரி செல்ஸியஸ்
- தும்பரிகுடா 5.8 டிகிரி செல்ஸியஸ்
- ஊட்டி 6.2 டிகிரி செல்ஸியஸ்
- அரக்கு வேலி 6.6 டிகிரி செல்ஸியஸ்
- மூணார் 9.3 டிகிரி செல்ஸியஸ்
- கொடைக்கானல் 9.9 டிகிரி செல்ஸியஸ்
- குன்னூர் 10.4 டிகிரி செல்ஸியஸ்

பெங்களூர்
அதேபோலம் பெங்களூர், கிரிஷ்னகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் குளிராக இருக்கும். இங்கு 10-17 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை காணப்படுகிறது. அதேபோல் மலைப்பகுதிகளில் வெப்பநிலை 5-10 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications