ஆளப்போறான் தமிழன்! வீரமுத்துவேல் + பிரக்ஞானந்தா+ சண்முகம்! 10 நாட்களில் உலகை வியக்க வைத்த தமிழர்கள்
சென்னை: சர்வதேச மேடைகளில் அடுத்தடுத்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவது கவனம் பெற்றுள்ளது. கடந்த இரண்டு வாரமாக தமிழர்கள் பலர் சர்வதேச செய்திகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.
இந்தியா சார்பாக இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 திட்டம் மூலம் விக்ரம் லேண்டர், பிரக்யான் லேண்டர் இரண்டையும் வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. அதோடு நிற்காமல் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் மனித பொருள் , லேண்டர், ரோவர் என்ற சாதனையையும் இந்தியா தன் வசமாக்கி உள்ளது.

விக்ரம் லேண்டர் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருந்தது. பிரக்யான் ரோவர் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வந்தது. அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்ல தொடங்கி உள்ளது. இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்து வருகிறது.
தமிழர் சாதனை: நிலவின் தென் பகுதிக்கு செல்வது தொடர்ந்து சவாலான விஷயமாகவே இருந்த நிலையில், உலகின் எந்த நாடும் நிலவின் தென் பகுதிக்கு செல்லாத நிலையில்.. இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவில் கெத்தாக கால் பதித்து உள்ளது!
நாசா, ஐரோப்பா ஆகிய நாடுகளும், சீனா போன்ற நாடுகளும் கூட நிலவின் தென் பகுதிக்கு சென்றது இல்லை. நிலவின் தென் பகுதிக்கு செல்லும் நாடுகளின் முயற்சியும் கூட தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. நிலவின் தென் துருவத்தை நெருங்க முயன்றால் கூட போது.. விண்வெளி திட்டங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.
இந்த திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல். இந்த திட்டத்தில் செயல்பட்ட பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3 என மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குனர்களாக இருந்து இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கியது தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள்தான். முதலில் சந்திரயான் 1 திட்டம் 2008 ல் செயல்படுத்தப்பட்டது.
இந்த சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். இதன்பின் சந்திரயான் 2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது இஸ்ரோ இயக்குநர் தமிழரான கே சிவன். அதேபோல் சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த வனிதா எனும் விஞ்ஞானி ஆவார்.
இந்த நிலையில் தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல். இவர்கள் மூவரும் தமிழர்கள். தமிழ் வழி பாடத்தில் அரசு பள்ளியில் படித்தவர்கள். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர்.
செஸ் போட்டி: இன்னொரு பக்கம் பிரக்ஞானந்தா உலக அளவில் கவனிக்கப்பட்டார். தமிழ்நாட்டை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகம் முழுக்க கவனிக்கப்பட்டு வருகிறார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அவர் ஆடிய விதம் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.
அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், டை பிரேக்கர் வரை சென்ற ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று பைனலுக்கு சென்றார். பைனலில் மேக்னஸ் கார்ல்சன் உடன் நடந்த ஆட்டத்தில் முதல் இரண்டு சுற்றுகள் டிராவில் முடிய 3வது சுற்றில் பிரக்ஞானந்தா டை பிரேக்கரில் தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் அஜர்பைஜான் நாட்டில் நடந்த உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். அவர் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும் உலக நாடுகள் அவரின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றன.
இப்படி சர்வதேச மேடைகளில் அடுத்தடுத்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவது கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் நேற்று சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் அபார வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து சர்வதேச மேடைகளில் அடுத்தடுத்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவது கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வாரமாக தமிழர்கள் பலர் சர்வதேச செய்திகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications