மின்வாரியம் திடீர் அறிவிப்பு.. இனிமேல் இப்படிதானாம்..ராஜேஷ் லக்கானி ஒரே போடு.. நிம்மதியில் தமிழ்நாடு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக, தமிழக மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில், இன்னொரு அதிரடியை அரசு முன்னெடுத்துள்ளது. இது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதிகரிப்பு: எனினும் இந்த வருடம், குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதமான கோடையில், மின் தேவையானது, எப்போதும் இல்லாத வகையில் அளவுக்கு அதிகரித்தது.. அதாவது, 19387 மெகா வாட்டாக அதிகரித்தது. அதாவது, தமிழகம் முழுவதும் உச்சபட்ச மின்நுகர்வு ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்திருந்தது.. சென்னையில் மட்டுமே, ஒருநாள் மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது..
மின்தேவை அதிகரிப்பு: மின்தேவை அதிகரித்துள்ள போதிலும், கூடுமான வரையில், பாதிப்பு இல்லாமல், தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் செய்யப்பட தமிழக அரசு முயற்சிகளை முன்னெடுத்தது. இதற்கு காரணம், அதே அளவு மின் உற்பத்தியும் கொள்முதலும் இருந்ததால் பற்றாக்குறை பெரிதாக ஏற்படவில்லை.
ஊழியர்கள்: அதேபோல, மின்தடையும் பெரிதாக ஏற்படாமல், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.. இதற்காக மின்வாரிய ஊழியர்களுக்கு பிரத்யேக உத்தரவும், அறிவுறுத்தலும் பிறப்பிக்கப்பட்டேயிருந்தது. மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும், நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் மின்வாரியம் அறிவுறுத்தி வந்தது.
இந்நிலையில், இன்னொரு அதிரடியை அரசு எடுத்துள்ளது.. அதாவது, மின்விநியோகம் எங்குமே பாதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.. 12 மண்டல தலைமை பொறியாளர்கள், 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை
பொறியாளர்களுடன், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆய்வு கூட்டம் நடத்தினார்.
முன்னெச்சரிக்கை: இந்த கூட்டத்தில்தான், தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் துவங்கும் வட கிழக்கு பருவ மழையின்போது மின் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, மின் கட்டணம் வாயிலாக வருவாயை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் உள்ள மின் இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் வசூலாகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாம்.
டிரான்ஸ்பர்: மேலும், மின்தடை ஏற்படுவதை தவிர்க்க, மின் சாதனங்களில் முழுதுமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அடிக்கடி மின் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக பணியாளர்களை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்குமாறும் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.. அடிக்கடி மின்தடை வந்தால், "டிரான்ஸ்பர்" என்ற நடவடிக்கை பாயும் என்று மின்வாரியம் கூறியுள்ளது, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications