EB bill கட்டாவிட்டால் இனி ப்யூஸ் கேரியரை பிடுங்கும் நிலை ஏற்படாதே! மின்வாரியத்தின் சூப்பர் ஐடியா
சென்னை: மின்சார கட்டணம் செலுத்தும் தேதி இரு மாதங்களுக்கு ஒரு முறை என்பதால் மற்ற கட்டணங்களை செலுத்துவது போல் இது எளிதாக நினைவில் இல்லாமல் போகிறது. அதனால் கடைசி நாளில் விதிக்கப்பட்ட நேரத்தை கடந்ததும் வீட்டில் மின் இணைப்பை மின்சார ஊழியர்கள் துண்டிக்கிறார்கள்.
இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு அசவுகரியம் ஏற்படும். இதை தவிர்க்க தற்போது அவகாசத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டுகிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது நினைவூட்டல் குறுஞ்செய்தியை கடைசி 3 நாட்களுக்கு முன்னதாக யூபிஐ #UPI இணைப்புடன் அனுப்புகிறது. குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்தி தாமதக் கட்டணத்தை தவிர்க்கவும்!
#TANGEDCO இப்போது உங்கள் நம்பிக்கைக்குரிய தோழனும் கூட! இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கியுள்ளது. மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் அப்போதெல்லாம் மின்சார வாரிய அலுவலகத்தில் வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
இதைத் தொடர்ந்து இணையதள வசதி வந்ததும் ஒவ்வொரு சர்வீஸ் எண்ணிற்கும் யூசர் நேம், பாஸ்வேர்டு தரப்பட்டது. இதை வைத்து இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.
இதனால் மீட்டரை பார்த்து கார்டில் என்ட்ரி போட வேண்டிய வேலையே இல்லை. நாம் பயன்படுத்திய யூனிட்கள் ஆன்லைனில் ஏறிவிடும். அதை வைத்து நாம் பணம் செலுத்தி வருகிறோம். டிஜிட்டல் இந்தியாவில் பணமில்லாத பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை வந்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் Tangedco இலச்சினை மற்றும் பச்சை குறியீடு ✅ இருக்கும். மேலும் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் வரும். அதில் View Bill, Pay bill என வரும். முதலில் வியூ பில்லை கிளிக் செய்தால் உங்கள் மின் கட்டணம் பிடிஎஃப்பில் டவுன்லோடு செய்யலாம்.
அந்த கட்டணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு pay bill என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் போன் பே, கூகுள் பே என எது வேண்டுமோ அதை ஓபன் செய்து பணத்தை செலுத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) உங்கள் மின்சாரக் கட்டணம் தயாராக இருக்கும்போது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பும். பில்லை பார்க்கலாம், செலுத்தலாம் என தமிழ்நாடு வாரியம் தெரிவித்துள்ளது.
சில நேரங்களில் மின்சார கட்டணம் கட்டுவதற்காக கடைசி நாள் வந்தாலும் சிலருக்கு நினைவில் இருப்பதில்லை. இதனால் அந்த வீடுகளில் மின் ஊழியர்கள் வந்து மின் இணைப்பை துண்டிப்பர் (fuse carrierஐ எடுத்து சென்றுவிடுவார்கள்.) அபார்ட்மென்ட்டாக இருந்தால் அசோசியேஷனில் கொடுத்துவிட்டு மின் கட்டணம் செலுத்தியது உறுதியானால் ப்யூஸ் கேரியரை மாட்டுமாறு சொல்லிவிட்டு சென்றுவிடுவர்.
இந்த சம்பவங்கள் எல்லாம் நடப்பது ஒரு பக்கம் அசவுகரியம் என்றால் இன்னொரு பக்கம் அசிங்கமாக இருக்கும். எனவே ஒவ்வொரு மின் நுகர்வோர்களுக்கும் மின் கட்டணம் செலுத்த விதிக்கப்பட்ட கடைசி நாளுக்கு 3 நாட்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டுவார்கள். மேலும் யூபிஐ லிங்கும் இருக்கும். எனவே எந்த இடையூறும் இல்லாமல் முன் கூட்டியே சரியான நேரத்திற்கு மின் கட்டணத்தை செலுத்தலாம்.












Click it and Unblock the Notifications