கரண்ட்ட தொட்டா மட்டும் ஷாக் அடிக்காது! இதை தொட்டாலும் "தூக்கி அடிச்சிடும்"! மின்சார வாரியம் வார்னிங்
சென்னை: மின் கட்டணம் சரிவர கட்டாததால் கீழே உள்ள செயலியை பயன்படுத்தி மின் கட்டணம் கட்டுங்கள் என யாராவது மெசேஜ் அனுப்பினால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என டான்ஜெட்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை அது போல் ஏதாவது மெசேஜ் வந்தால் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் ஆன்லைன் செயலி வாயிலாகவும் செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சில மோசடி கும்பல்கள் இதை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அண்மையில் மின் நுகர்வோர்களுக்கு உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால் இன்றிரவு உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்துங்கள்' என போலியான குறுஞ்செய்தி பரவுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நுகர்வோர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தூண்டிலில் சிக்க வேண்டாம். இது மின் கட்டண மோசடியின் புது அவதாரம். உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்தபட்ச ரூ 3 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால் அதை பொருட்படுத்தீர்கள். பதற்றப்படாமல் முதலில் உங்கள் மின் கட்டண நிலையை மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக https://tnebltd.gov.in மற்றும் செயலியின் வாயிலாக சரி பார்க்கவும்.
எஸ்எம்எஸ் வாயிலாக வந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எஸ்எம்எஸ் வந்த எண்ணை அழைக்க வேண்டாம். இது தொடர்பாக சைபர் கிரைம் குற்ற எண் 1930 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் ஆன்லைனிலேயே பல்வேறு கட்டணங்களை கட்டி வருகிறார்கள். இதனால் மோசடிக்காரர்கள் எளிதாக ஏமாற்ற புதுசு புதுசாக யோசிக்கிறார்கள்.
அந்த வகையில் மின்சார கட்டணம் கட்டவில்லை, கட்டவிட்டால் மின் துண்டிப்பு ஏற்படும் என தெரியாத எண்களில் இருந்து மெசேஜ் வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்கிறார்கள். அவர்கள் அனுப்பும் லிங்கை தொட்டால் அதன் மூலமாக நமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் மொத்தம் காலியாகிவிடும்.
இதே போல் வங்கியிலிருந்து மேனேஜர் பேசுவதாக கூறுவார்கள். உங்கள் ஏடிஎம் கார்டு செயலிழக்க போகிறது என்றும் அப்படி ஆகாமல் இருக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்பார்கள். அந்த லிங்கை கிளிக் செய்தால் அவ்வளவுதான். எல்லாம் போச்சு!
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications