மதுரவாயலில் சோகம்! தாறுமாறாக வந்த டேங்கர் லாரி.. பைக் மீது ஏறி இறங்கியதில் தந்தை மகன் பலி
சென்னை: மதுரவாயல் அருகே முன்னால் சென்ற பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை மகன் இருவரும் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே ஷெனாய் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராபர்ட் (வயது 50). நீச்சல் பயிற்சியாளர். இவரது மகன் சாமுவேல் (20). சாமுவேல் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், தந்தை மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் மதுரவாயல் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

லாரி மோதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தந்தை மகன் இருவரும் எதிரார்பாராத விதமாக டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கினர். இதில் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், தந்தை மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தந்தை மகன் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், லாரி டிரைவர் அதிவேகத்தில் வந்ததாகவும், டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். லாரி மோதி தந்தை மகன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications