கொரோனா பரவல்.. டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தளங்களை மூடக்கோரி வழக்கு
சென்னை; கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தளங்களை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 2020ம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனாவின் தாக்கம் தணிந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவில கடந்த 21ம் தேதி நிலவரப்படி, 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரிக்கு பின் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது,. இதனால் இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிக் 5.81 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது. மாவட்ட அளவில் நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications