சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒருவருக்கு எவ்வளவு மது.. டாஸ்மாக் கடையை திறக்கும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய 12 நடைமுறைகள்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் மீணடும் திறக்கப்படுகின்றன.இந்நிலையில் கடையை திறக்கும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து டாஸ்மாக் நிர்வாகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.

Recommended Video

    TASMAC Must Follow 12 Key Commands

    மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட உள்ளன.

    தமிழகத்தல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது, அதேபோல் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்படாது. இந்நிலையில் மதுக்கடைளை திறக்கப்போகும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்

    கொரோனாவில் தவிக்கும் இந்தியா.. உதவும் அமெரிக்கா.. டிரம்ப் சூப்பர் அறிவிப்புகொரோனாவில் தவிக்கும் இந்தியா.. உதவும் அமெரிக்கா.. டிரம்ப் சூப்பர் அறிவிப்பு

    500 டோக்கன்

    500 டோக்கன்

    1. 08.5.2020 அன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மட்டுமே 16.5.2020 அன்று திறக்கப்பட வேண்டும். பிற கடைகள் மாவட்ட மேலாளர்கள் உத்தரவு பெற்ற பின்னரே திறக்க வேண்டும்.
    2. கடை மேற்பார்வையாளர்கள் கடையில் போதிய இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சரக்கு இருப்பு தேவைப்படும் கடைகள் கிடங்கை தொடர்பு கொள்ள வேண்டும்,.
    3. ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன்கள் (டோக்கனில் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது) மற்றும் நாள் ஒன்றுக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்க வேண்டும்.
    ஒரு புல் அல்லது 4 குவாட்டர்

    ஒரு புல் அல்லது 4 குவாட்டர்

    1. ஒரு நபருக்கு ஆதார் அடையாளம் பெற்று 750 மிலி ஒரு பாட்டில் அல்லது 375 மிலி இரண்டு பாட்டில் அல்லது 180 மிலி 4 பாட்டில்கள் அல்லது 650 மிலி பீர் இரு பாட்டில்கள் மட்டுமே வழங்க வேண்டும். மொத்த விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    2. பேரிகார்டு மறறும் ஒலிப்பெருக்கி அவசியம் பொருத்தப்பட வேண்டும்.
    3. பணியாளர் அனைவரும் கையுறை, முககவசம், சேனிடைசர் ஆகியவை உபயோகிக்க வேண்டும்.
    வயது வாரியாக டோக்கன்

    வயது வாரியாக டோக்கன்

    1. சுமார் 20 பில் நகல்களை தினசரி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
    2. அரசு கூறியுள்ள வயது முறையில் டோக்கன் வழங்குதல் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
    3. இன்று (16.05.2020) மட்டுமே கதவு வெல்டிங் திறப்பு செய்ய வேண்டும்
    எஸ்எம்ஸ்ஸி விபரம்

    எஸ்எம்ஸ்ஸி விபரம்

    விற்பனை விபரத்தை மாலை 7 மணிக்குள் வழக்கமான முறையில் எஸ்எம்எஸில் தெரிவிக்க வேண்டும். மேலும் இவ்விபரத்தை (பணியாளர் ) இளநிலை உதவியாளருக்கு தொலைப்பேசியில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தவறுகள் மேற்கொள்ளும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    அனைத்து பணியாளர்களும் கடை பணியில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Here are 12 key commands that employees must follow when opening tasmac shop
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X