டாஸ்மாக் வருமானமும் கடனும் தான் உயர்ந்துள்ளது.. 4வது ஆண்டாக ஏமாற்றமே பரிசு! பட்ஜெட் பற்றி அண்ணாமலை
சென்னை: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "வழக்கம்போல நான்காவது ஆண்டாக சாமானிய மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசு அளித்திருக்கிறது திமுக" என்று விமர்சித்துள்ளார். திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 2025- 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். மொத்தம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். பட்ஜெட்டில், பெண்கள் பெயரில் இடம் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் ஒரு சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை பயன்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.

பட்ஜெட் பற்றி அண்ணாமலை கருத்து
இந்த நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,
* தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.
* தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
* ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
* திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
துறை வாரியாக எவ்வளவு ஒதுக்கீடு
* உயர் கல்வித்துறை - 8,494 கோடி ரூபாய்
* பள்ளிக்கல்வித் துறை - ரூ. 46,767 கோடி
* நகர்ப்புற வளர்ச்சி துறை - ரூ.25,000 கோடி
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை - ரூ.572 கோடி
* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை - ரூ.1,975 கோடி
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.21,906 கோடி
என்னென்ன அறிவிப்புகள்
* சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரூ.310 கோடியில் வேளச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். இதன் மூலம் 7 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். சென்னை வேளச்சேரி டூ குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கிமீ நீளத்திற்கு இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும்.
* ரூ.70 கோடி மதிப்பீட்டில் ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள்.
* ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
* சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்
* மகளிர் விடியல் பயண திட்டத்திற்காக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 29.74 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.
* சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
* ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் அமைக்கப்படும். இவ்வாறு தங்கம் தென்னரசு அறிவித்து வருகிறார்.
* புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும்.
* தாம்பரத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்
* ரூ.56 கோடி செலவில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
சென்னையில் புதிய நீர்த்தேக்கம்
* கிண்டியில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பன்முக போக்குவரத்து முனையம் அமைக்கப்படும்.
* தமிழக போக்குவரத்துத் துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயங்கள் அமைக்கப்படும் * ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.












Click it and Unblock the Notifications