மதுப்பிரியர்களின் மனக்குறை நீங்க போகுது.. வேற லெவலில் மாறப்போகும் டாஸ்மாக் கடைகள்.. ஆஹா இது வேறயா?
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன? என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குடிமகன்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனினும், இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிர்வாகம், கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இருந்தாலும் ஒரு சில இடங்களில் இன்னும் கூட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக மது பிரியர்கள் மத்தியில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 200 டாஸ்மாக் கடைகளை நவீனப்படுத்தி ஜொலி ஜொலிக்க வைக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
200 டாஸ்மாக் கடைகளில்: தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 238 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. எலைட் மதுபானக் கடைகள் 238 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் கூட எலைட் மதுபானங்களின் விலை கிடு கிடுவென உயர்த்தப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் கூட மதுபான விலை உயர்த்தப்படலாம் என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. இது ஒருபக்கம் இருக்க டாஸ்மாக் கடைகளை மேம்படுத்தி நவீனப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, தற்போது நிர்வாக வசதிக்காக 'டாஸ்மாக்' 5 மண்டலங்களாகவும், 38 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மாவட்டத்திற்கு 5 கடைகள் வீதம் முதல் கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறதாம். நவீனப்படுத்துவது என்றால், டாஸ்மாக் கடைகளில் விளக்குகளை ஆங்காங்கே பொருத்தி ஜொலி ஜொலிக்க வைக்கப்பட உள்ளதாம்.
விலைப்பட்டியல்: அதேபோல, எந்தெந்த மதுபானம் எந்த ரேட்டில் உள்ளது என்பதை டிஜிட்டல் போர்டில் வைத்து மதுவாங்க வருபவர்கள் சரியான விலையை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட உள்ளதாம். எடுத்துக்காட்டாக சொல்வது என்றால் சில உணவகங்களிலும் ஜூஸ் கடைகளிலும் வெளியில் டிஜிட்டல் போர்டு வைத்து விலையை ஓட விட்டு இருப்பார்கள். அதேபோல டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் போர்டு வைத்து விலையை பளிச் என்று தெரியவைக்க இருக்கிறார்களாம்.

இன்னும் எளிதாக சொல்வது என்றால், டவுன் பஸ்களில் தற்போது டிஜிட்டல் திரையில் செல்லும் இடம் ஓடுகிறது அல்லவா? அது போல டிஜிட்டல் போர்டுதான் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு சென்றாலே அசுத்தம் நிறைந்ததாகவும் பக்கத்திலேயே காலி பாட்டில்களும் டம்ளர்களும் என குப்பைகளாக காட்சி அளிப்பதாகவும் மது பிரியர்கள் ஆதங்கப்படுவதுண்டு. அவர்களின் ஆதங்கத்தையும் மனக்குறையை போக்கும் விதமாக டாஸ்மாக் நிர்வாகம் இந்த நடவடிக்கையில் இறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
பேச்சுவார்த்தை?: டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் செலவை மது உற்பத்தி நிறுவனங்களே ஏற்க வைக்கவும் பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் உடன்பாடு எட்டப்பட்டால் விரைவில் தமிழகத்தில் சுமார் 200 மதுக்கடைகள் ஜொலிக்கும் எனத் தெரிகிறது. தற்போது புதுச்சேரி சென்றால் பல மதுக்கடைகள் இதேபோல கண்ணைக் கவரும் விளக்கு அலங்காரத்துடன் ஜொலிக்கும். அதேபோலத்தான் மாற்றி அமைக்க ஆலோசனை நடப்பதாக சொல்லப்படுகிறது.
-
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை எவை..? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications