Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் குபீர்.. மதுபானம் விலை ஏறுது.. குவார்ட்டருக்கு எவ்ளோ உயர்வு பாருங்க.. குடிமகன் தலையில் இடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் மதுபான பொருட்களின் விலைகளும் உயரப்போகிறதாம். இதைக்கேட்டு குடிமகன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வந்து கொண்டிருப்தபால், டாஸ்மாக் மதுக்கடைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

 Tasmac News and Liquor Price hike very soon in Tamil nadu, say DMK Minister Muthusamy

டாஸ்மாக் போராட்டம்: பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்கிறார்கள்.
மற்றொருபக்கம், 500 மதுக்கடைகளை ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில், 4829 மதுக்கடைகள் இப்போது செயல்பட்டு செயல்படுகிறது. இதனால், மூடப்பட்ட 500 மதுக்கடைகளால், நஷ்டம் வந்துள்ளால், இதை ஈடுகட்டுவதற்கான நடவடிக்கையை அரசு யோசித்து வருகிறது. சமீபத்தில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, மதுபாட்டில்கள் விலையை கணிசமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டதாம்.

பெரிய சுமை: அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தினால் மக்களுக்கு பெரிய சுமையாக தெரியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும், பிராண்டுக்கு ஏற்ப 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் ஆலோசனைகள் தரப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் சொல்லும்போது, பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விலையை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது... ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும் முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிராண்டுகள் அடிப்படையில் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

அதிரடி முடிவு: இதே போல் பீர் பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது சரக்கு விலைகள் குறித்து தெரிவிப்போம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சட்டசபையில், அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: "மாநிலத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில், மதுபானங்களின் மீது ஆயத்தீர்வை விதிக்கப்படுகிறது. இந்த தீர்வையானது சாதாரண மது வகைகளை பொறுத்தவரை, 'புரூப்' லிட்டர் ஒன்றுக்கு, 250லிருந்து, 500 ரூபாயாகவும், நடுத்தர வகைக்கு லிட்டருக்கு லிட்டருக்கு, 500லிருந்து, 1,000 ரூபாயாகவும் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க, 1937 மது விலக்கு சட்டத்தின் உட்பிரிவை திருத்தம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இந்த சட்ட முன் வடிவானது, மேற்குறிப்பிட்ட முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள்: ஏற்கனவே, மூலப்பொருட்கள் விலை உயர்வால், மதுபானங்களின் விலையை உயர்த்தி தருமாறு, மதுபான நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வரும்நிலையில், ஆயத்தீர்வை உயர்வும் தற்போது அமலுக்கும் வரஉள்ளது.. இதனால், செலவு அதிகமாகும் என்பதுடன், மதுபானங்களின் விலை பாட்டிலுக்கு, 5 முதல், 40 ரூபாய் வரை விரைவில் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+