Tasmac: ரெக்கார்ட் படைத்த டாஸ்மாக் வசூல்.. முதல்நாளே இம்புட்டு கோடியா.. தூக்கி சாப்பிட்ட "கலெக்ஷன்"
ஊரடங்கு அறிவித்தபோதும், மது விற்பனை வசூலில் சாதனை படைத்துள்ளது
சென்னை: டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகை மது விற்பனையானது, ரூ.660 கோடியை தாண்டி விட்டது.. அந்த வகையில், கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் 680 கோடிக்கு மேல் மது விற்பனையாகி உள்ளது.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற மிக முக்கிய பண்டிகைகளுக்கு டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும்...
ஒரே நாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என்ற செய்திகளும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் இந்த முறையும் பொங்கல் விழாவை முன்னிட்டு எதிர்பார்ப்பு எழுந்தது..

உழவர் திருநாள்
பொங்கல் பண்டிகை என்பதால், 4 நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது... அதேபோல, மாட்டுப் பொங்கல் தினமான அதாவது இன்றைய தினம் வழக்கத்துக்கு அதிகமாகவே மது விற்பனையாவது இயல்பான விஷயமாகும்.. ஆனால், கரிநாள் என அழைக்கப்படும் உழவர் திருநாளன்றும் அரசு ஊரடங்கு அறிவித்துவிட்டது. இப்படி 4 நாட்கள் தொடர்ந்து லீவு என்ற அறிவிப்பு குடிமகன்களை அப்செட் ஆக்கிவிட்டது..

தள்ளுமுள்ளு
ஆனாலும், கடந்த 12ம் தேதி முதலே மது அருந்த ஆரம்பித்துவிட்டனர்.. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி நிரம்பி வழிந்தது.. வழக்கத்தைவிட அதிகமாக இரவு நேரத்தில் மதுபான பிரியர்கள் குவிய ஆரம்பித்தனர்.. இதனால் சில கடைகளில் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.. எங்கெல்லாம் கூட்டம் நெருக்கி தள்ளியதோ, அங்கெல்லாம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்..

மதுக்கடைகள்
மது பானங்களை பாட்டில் பாட்டிலாக வாங்கி ஞாயிற்றுக்கிழமைக்காக ஸ்டாக் வைக்க முனைந்தனர்... அதிலும், பைக், கார்களில் வந்து மதுபானங்களை மொத்தமாக வாங்கியவர்களும் ஏராளம் உண்டு.. நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுவிட்டன.. இந்நிலையில், ஒரே நாளில் ரூ.300 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

செம வசூல்
குறிப்பாக 12-ந் தேதி ரூ.155.6 கோடிக்கும், 13-ந் தேதி ரூ.203.5 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது... 12, 13-ந் தேதிகளில் சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.70.54 கோடிக்கும் மது விற்பனை ஆனது.. ஆக, கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.680 கோடிக்கு மேல் மது விற்பனையாகி உள்ளது... முழு ஊரடங்கையும் தாண்டி, கூடுதலாக மதுவிற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications