டாஸ்மாக் விடுமுறை.. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடை,பார்களுக்கும் அரசு லீவு அறிவிப்பு
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை அதாவது ஜனவரி 15, தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சுமார் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளிலிருந்து ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருடம் முழுவதும் அரசுக்கு கிடைத்து வருகிறது. அதற்கேற்றவாறு, தினமும் 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

சிறப்பு நாட்கள்: அதிலும் சிறப்பு நாட்களில் டாஸ்மாக் வருமானம் இரட்டிப்பாக பெருகிவிடும்.. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் வருமானம் 3 மடங்காக பெருகிவிடுகிறது.. இப்படித்தான் கடந்த தீபாவளிக்கும் 600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் பரபரத்து, அதற்கு எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தன.
இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை போலவே பொங்கல் பண்டிகைகளிலும் என்றாலே டாஸ்மாக்குகள் களை கட்டும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தி ஜெயந்தி: ஏற்கனவே தமிழக அரசு சார்பாக ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம் உள்ளிட்ட 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: "ஜனவரி 15ம் தேதி (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மேலும் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications