கொரோனாவை விட அதி உச்சமாக இருக்கிறதே... தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.258 கோடிக்கு மது விற்பனை
சென்னை: தமிழகத்தில் ஞாயிறு லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ258 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் நாளை அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வருகின்றன. அத்துடன் 7 மாதங்களுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மது கடைகளில் கூட்டம்
புதிய கட்டுப்பாடுகளின் கீழ் மதுபான கூடங்கள்- பார்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.

ரூ258 கோடி விற்பனை
லாக்டவுன் அமல்படுத்தப்படக் கூடும் என்கிற தகவல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படும் என்பதால் நேற்றே கடைகளில் அலைமோதினர் குடிமகன்கள். இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ258 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

சென்னைக்கு முதலிடம்
இதில் சென்னை மண்டலம் தான் அதிக அளவில் மதுபானங்களை விற்பனை செய்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ58 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் 2-வது இடம் மதுரை மண்டலம். மதுரை மண்டலத்தில் ரூ49 கோடிக்கு மதுபானங்கள் நேற்று விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகளை மூடுங்க..
திருச்சியில் ரூ.48 கோடி, சேலத்தில் ரூ.47 கோடி, கோவையில் ரூ.48 கோடி என நேற்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் மதுபான கடைகளை மூடவேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications