வாடகை வீட்டுக்காரர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. வரி கட்டியாச்சா? குடிநீர் வாரியம் அதிரடி முடிவை பாருங்க
சென்னை: யாரெல்லாம் வரி செலுத்தவில்லையோ, அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாய போகிறதாம்.. குடிநீர் வாரியம் அதிரடியான முடிவு ஒன்றினை எடுத்துள்ளது.
குடிநீர் வரி செலுத்துவது தொடர்பாக, புதுப்புது அதிரடிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பையும் சமீபத்தில் அரசு வெளியிட்டிருந்தது..

சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், வர்த்தக உரிமம் பெறுதல் போன்றவை தொடர்பாகவும் கியூ.ஆர். குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ் நிலையங்கள்: குடியிருப்புகள் தவிர பஸ் நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், சமூக நல மையங்கள் மற்றும் பொது கழிப்பறைகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். இது தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தில் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்வு காண்பதற்காக அனுப்பப்படும்" என்றும் அதிகாரிகள் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில், வரி செலுத்தாமல் நிறைய பேர் உள்ளார்களாம்.. இதில் நிறைய பேர் பெரும்பாலானோர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக தெரிகிறது.. அதனால், வரி செலுத்தாத வீட்டு உரிமையாளர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாம்... அதுமட்டுமல்ல, உரிமையாளர் இல்லாதபட்சத்தில், வாடகைதாரர்களிடம் வரி வசூலித்து, அதை வாடகையில் கழித்துக் கொள்ளும் வகையில் நோட்டீஸ் வழங்கவும் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செப்டம்பர்: அதாவது, ஆண்டுக்கு, வரி மற்றும் கட்டணமாக, 892 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டும். இந்த கட்டணமானது, முந்தைய ஆண்டுகள் நிலுவையுடன் சேர்த்து, 820 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். செப்டம்பர் 15ம் தேதி வரை, 445 கோடி ரூபாய் நிலுவையுடன் சேர்த்து, 820 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். ஆனால், செப்டம்பர் 15ம் தேதி வரை, 445 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது.. மிச்சம் 375 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.
இதில், 120 கோடி ரூபாய் அரையாண்டு பாக்கியும், 255 கோடி ரூபாய் முந்தைய பாக்கியும் வசூலாக வேண்டுமாம்.. முந்தைய பாக்கியான, 255 கோடி ரூபாயில், 120 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் இல்லாமல், வரி மட்டுமே செலுத்த வேண்டி உள்ளது. இதில் 95 சதவீதம் வரி, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வசூலாக வேண்டி உள்ளது.
வரிவசூல்: இதை வசூலிப்பதற்காகத்தான், வருவாய்த் துறை அதிகாரிகள் ஓனர்களுக்கு, ஜப்தி நோட்டீஸ் வழங்க, வாரியம் முடிவு செய்துள்ளதாம்.. உரிமையாளர் இல்லாதபட்சத்தில், வாடகைதாரர்களிடம் வரி வசூலித்து, அதை வாடகையில் கழித்துக் கொள்ளும் வகையில் நோட்டீஸ் வழங்கவும் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications