ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிசிஎஸ்.. ஆள்குறைப்புக்கு நடுவே சம்பள உயர்வும் அறிவிப்பு
சென்னை: டிசிஎஸ் சம்பள உயர்வை (TCS salary hike) அறிவித்துள்ளது. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டுள்ளது. மொத்த ஊழியர்களில் 80 சதவீதம் பேருக்கு இந்த சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வரும் என்று டிசிஎஸ் நிறுவன தலைமை மனிதவள அதிகாரி (CHRO) மில்லிண்ட் லக்காட் ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்த ஓராண்டில் 12,000 பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அண்மையில் அந்த நிறுவனம் அறிவித்து இருந்தது. மிட் லெவல் பணியாளர்களை நீக்க இருப்பதாக வெளியான அறிவிப்பு, டிசிஎஸ் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பணி நீக்க நடவடிக்கை 2026 நிதி ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று டிசிஎஸ் கூறியிருந்தது.

டிசிஎஸ்சில் லே ஆஃப் நடவடிக்கை
ஏஐ பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கால தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தயாராகும் ஒரு பர்ந்த திட்டத்தின் நடவடிக்கையாக இந்த லே ஆஃப் நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிசிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக டிசிஎஸ் கூறும் போது, "ஏஐ மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான மாற்றங்கள், மார்க்கெட்டை விரிவுப்படுத்துதல் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
12 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்படும்
பொதுவாக தொழில்நுட்ப மாற்றங்கள், மார்க்கெட்டை விரிவுப்படுத்தும்போது ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கி பணி நியமனம் செய்யப்படுவார்கள். தற்போதைய இந்த மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக சுமார் 12 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்படும். இது மிடில் மற்றும் சீனியர் லெவலை பாதிக்கும்" என்று கூறப்பட்டு இருந்தது. டிசிஎஸ்சின் இந்த அறிவிப்பு ஐடி துறையினரை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஐடி துறைகளில் டிசிஎஸ் என்பது அரசு வேலை போன்றது எனவும் அந்த நிறுவனத்திலே ஆட்குறைப்பு என்றால் இதர நிறுவனங்களின் நிலை என்னவோ? என்று சமூக வலைத்தளங்களில் டெக்கிகள் பதிவிட்டு வந்தனர். இதனிடையே, ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் டிசிஎஸ் மெயில் அனுப்பியுள்ளது.
80 சதவீதம் பேருக்கு சம்பள உயர்வு
மொத்த ஊழியர்களில் 80 சதவீதம் பேருக்கு இந்த சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிட் மற்றும் ஜூனியர் லெவல் அதிகாரிகளுக்கு இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) மில்லிண்ட் லக்காட் மற்றும் கே சுதீப் அகியோர் ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளனர். எனினும், எந்த அளவு ஊதிய உயர்வு இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
டிசிஎஸ் அனுப்பிய மெயில்
டிசிஎஸ் மேனேஜ்மேண்ட் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில் கூறியிருந்ததாவது:- உங்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நமது ஊழியர்கள் 80 சதவீதம் பேருக்கு சம்பளம் உயர்வு அளிக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 2025 முதல் இது அமலுக்கு வரும்" என்று தெரிவிக்கபட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications