டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஏப்ரல் 26ம் தேதி சென்னையில் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:

tcs-hiring-for-sql-database-administrator-role-and-interview-to-be-held-on-april-26

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது MS SQL DBA (SQL Database Administrator) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணில் முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோல் எம்எஸ் எஸ்க்யூஎல் சர்வர் 2008/2008 R2/2012/2014/2016/2017/2019 ஆகியவற்றில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். மேலும் எஸ்க்யூஎல் 2016 மற்றும் எஸ்க்யூஎல் 2017 ஆகியவற்றில் 3 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் இருக்க வேண்டும். எஸ்க்யூஎல் சர்வர் அப்கிரேடேஷனில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். ட்ரபிள் சூட்டிங் மற்றும் ரிசால்விங் டேட்டாபேஸ் பிரச்சனைகளை கையாண்ட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பணிக்கான இண்டர்வியூ என்பது ஏப்ரல் 26 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

அதேபோல் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 26ம் தேதி இண்டர்வியூ விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். இண்டர்வியூ இடம், நேரம் உள்ளிட்டவை இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+