அரிசி அட்டைதாரர்களே.. தேங்காய் எண்ணெய்யை விடுங்க.. இனி "இந்த" பொருளும் ரேஷனில் வருது.. அரசு அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்து வரும்நிலையில், இனி கூடுதலாக மற்றொரு பொருளையும் ரேஷனில் வினியோகிக்க முடிவு செய்துள்ளதாம்.
விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.
இப்போதைக்கு அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறதாம்.

பண்டிகை சீசன்: இதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவைப்படும், 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில், 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய உள்ளதாம்.
அதுமட்டுமல்ல, பண்டிசை சீசன் துவங்க உள்ளதால், உணவு தானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கும், ரேஷனில் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல, தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறதாம்.
தேங்காய் எண்ணெய்: இதனிடையே ரேஷனில் விரைவில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வலம்வருகின்றன. இப்படி அடுத்தடுத்த குட்நியூஸ் வந்துகொண்டிருக்கும் சூழலில், இன்னொரு ஹேப்பி தகவலை கூறியுள்ளார் அமைச்சர் மதிவேந்தன்
டான்டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு சென்று, ரேஷன் கடைகளில் தேயிலை துாள் விற்பனை செய்ய தமிக அரசு நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் டான்டீ (அரசு தேயிலை தோட்ட நிறுவனம்) அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ரேஷனில் டீ தூள்: இதில், மாநில வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். அபபோது அவர் பேசும்போது, டான்டீ ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.. டான்டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு சென்று, ரேஷன் கடைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் தேயிலை தூள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 2018ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மறுபடியும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications