அரசு பள்ளியில் படித்துவிட்டு பிஇ சேரும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி கமிஷனர் மேஜர் அறிவிப்பு
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக்காக ஆகும் செலவீனங்களான படிப்பு கட்டணம், விடுதி கட்டணம் அல்லது போக்குவரத்து கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். ஏனெனில் அண்ணா பல்கலைக்கழகங்களின் கீழ்தான் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இயங்கி வருகிறது. தற்போது 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

மாணவர்களுக்கு இந்த கலந்தாய்வு மூலம் விரும்பும் கல்லூரிகள் மதிப்பெண் அடிப்படையில் தரப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக்காக ஆகும் செலவீனங்களான படிப்பு கட்டணம், விடுதி கட்டணம் அல்லது போக்குவரத்து கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் மாநில அரசே ஏற்றுள்ளது.
அதேபோல், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை ஆணை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொறியியல் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் மற்றும் முதல் பட்டதாரி மாணவர்கள் உள்பட அரசின் சலுகைகள் பெறும் மாணவர்களிடம் அனைத்து கட்டணங்களையும் செலுத்த சில பொறியயல் கல்லூரிகள் வற்புறுத்துவதாக தொழில்நுட்ப கல்வி கமிஷனருக்கு புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், தொழில்நுட்ப கல்வி கமிஷனர் ஆபிரகாம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுகளை மீறி, சில பொறியியல் கல்லூரிகள் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் உள்பட அரசின் கட்டண சலுகை பெறும் மாணவர்களிடம், அனைத்து கட்டணங்களையும் செலுத்த வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளது. எனவே அரசின் கல்வி கட்டண சலுகை பெறும் மாணவர்களிடம் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டணங்களை வசூலிக்க கூடாது என கண்டிப்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications