அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்த கேள்வி.. சட்டென தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன பதில்!
சென்னை: தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளகளை சந்தித்து பேசினார். பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழிசையிடம் செய்தியாளர்கள் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்தும் கேட்டனர். அதற்கு தமிழிசை அளித்த பதிலை பார்க்கலாம்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நமக்கு உணவு கொடுக்கிறது என்ற வகையில், காவிரி விவசாயிகள் எல்லாரும் நம் மனதிற்கு நெருக்கமானவர்கள் என்கிற போது வருத்தமாகத்தான் இருக்கிறது. புதுச்சேரியை பொருத்தவரை அவர்கள் தரவேண்டியது 7 டிஎம்சி. இன்றைக்கு வரவேண்டியது எவ்வளவு என்றால் 2 டிஎம்சி. ஆனால் 0.5 டிஎம்சி தண்ணீர் தான் வந்திருக்கிறது.

இது எப்படி போதுமானதாக இருக்கும். இந்த கணக்கீடே அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரின் அளைவை கணக்கீட்டு செய்து தான் சொல்லப்படுகிறது. இதுவே போதாது தான். ஆனால் அதை கூட தராததுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது. என்னுடைய கோரிக்கை என்னவென்றால் இங்கே ஆட்சி செய்துகொண்டு இருக்கும் அரசும், கர்நாடகாவை ஆட்சி செய்துகொண்டு இருக்கும் அரசும், அரசியல் ரீதியாக இணக்கமாக இருப்பவர்கள்.
இது என்ன லாஜிக்?: ஆக சில நேரங்களில் சட்ட ரீதியாக சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.. சில நேரங்களில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதில் கூட்டணிக்கு என்று பேச்சுவார்த்தை நடத்தும் போது.. காவிரி தண்ணீருக்காக ஏன் இதுவரை இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதிலும் கூட எதிர்க்கட்சியை தான் குறை சொல்கிறார்கள். ஆளும் கட்சியாக இருக்கிற போதும் எதிர்க்கட்சியை தான் குறை சொல்கிறார்கள்..
அவர்கள் எதிக்கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியை தான் குறை சொல்கிறார்கள்.. இது தவறு.. என்ன அர்த்தம்.. இன்று எதிர்க்கட்சியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த லாஜிக்கே எனக்கு புரியவில்லை. ஆட்சியில் இருக்கும்போது அதற்கு நீங்கள் தீர்வு காணவேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது நடைபயணம் சென்றீர்கள்.. போராட்டம் செய்தீர்கள் சரி. ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஏன் போராட்டம் நடத்த வேண்டும்..
அதிமுக பாஜக கூட்டணி முறிவு: நீங்களே தானே தீர்வு காண வேண்டும். தீர்வு காண்பது அரசின் கடமை. கோர்ட்டுக்கு போகிறார்கள்.. போராடுகிறார்கள்.. ஆனால் உணர்வு ரீதியாக நீங்கள் உண்மையாக.. தோழமை கட்சிகளாக இருக்கிறீர்கள்.. காவிரி பிரச்சினையில் தீர்வு காண முடியவில்லை என்றால் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும். முன்பெல்லாம் மாநில முதல்வர்கள் அங்கே சென்று பேசித்தான் தண்ணீர் பெற்று தந்தார்கள்.. காவிரி விவகாரத்தில் நெடுங்கால தீர்வு வேண்டும் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் தண்ணீர் வரனும், மழையை எதிர்பார்த்து தான் கணக்கீட வேண்டும் என்று எல்லாம் இல்லாமல் ஒரு நிரந்தர தீர்வு வேண்டும். இதற்கு எல்லா மாநிலங்களும் ஒத்துழைப்பு தர வெண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, அதிமுக பாஜக கூட்டணி முறிவினை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- பாஜக அதிமுக கூட்டணி பற்றிய கருத்தை நான் கூற விரும்பவில்லை.
எனக்கு இதுதான் வருத்தம்: சமுதாயம் சார்ந்த பொதுநலன் சார்ந்த கருத்துக்களை சொல்கிறேன். இப்போது நான் அரசியலில் இல்லை. ஆனால் என்னை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு பலமான ஒரு எதிர்க்கட்சி இருக்க வேண்டும். பலமான எதிரணி இருக்கும் போது பல விஷயங்களை எடுத்து சொல்ல முடியும். அது எந்த அணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த கட்சியோடு இருந்தால் நல்லது.. அந்த கட்சியோடு இருந்தால் நல்லது என்று கூற விரும்பவில்லை. அரசியல் ரீதியாக தேர்தல் ரீதியாக கருத்தினை சொல்ல விரும்பவில்லை.
72 ஆண்டுகள் கழித்து ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களை பெற்றுள்ளது. இதற்கு நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டும். எனக்கு உள்ள வருத்தம் என்னவென்றால், சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றதற்கு இப்போதுள்ள பிரதமருக்கு கிரெடிட் கொடுக்காமல் முந்தைய பிரதமருக்கு கிரெடிட் கொடுக்கிறார்கள். அப்போ தமிழகத்தில் நீங்க செய்கிற சாதனைகளுக்கு எல்லாம் முந்தைய அரசுதான் காரணம் என்று சொல்ல முடியுமா?.. இவ்வாறு தமிழிசை பேசினார்.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்











Click it and Unblock the Notifications